விளையாட்டு

அசத்திய ஷமி.. நிதானமாக ஆடி வெற்றிபெற வைத்த ராகுல்.. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அபார வெற்றிபெற்ற இந்தியா !

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.

அசத்திய ஷமி.. நிதானமாக ஆடி வெற்றிபெற வைத்த ராகுல்.. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அபார வெற்றிபெற்ற இந்தியா !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஆசியக்கோப்பை தொடரின் வெற்றிக்கு பின்னர் இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் களமிறங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம்பிடித்திருந்தனர்.

இந்த தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் ரோஹித், விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, குலதீப் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு 3-வது ஒருநாள் போட்டிக்கான அணியில் அவர்கள் இடம்பிடித்துள்ளனர். இத காரணமாக நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணியை கே.எல்.ராகுல் தலைமை தாங்கினார்.

பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, முதல் ஓவரிலேயே மிச்சேல் மார்ஷின் விக்கெட்டை இழந்தது. எனினும் ஸ்டீவன் ஸ்மித்-வார்னர் இணை சிறப்பாக ஆடியது.

அசத்திய ஷமி.. நிதானமாக ஆடி வெற்றிபெற வைத்த ராகுல்.. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அபார வெற்றிபெற்ற இந்தியா !

ஸ்டீவன் 41 ரன்களுக்கும், வார்னர் 52 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். அதன் பின்னரும் அடுத்து வந்த வீரர்கள் சீராக ரன் குவிக்க ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 276 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய தரப்பில் அபாரமாக பந்துவீசிய சமி 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

பின்னர் ஆடிய இந்திய அணிக்கு தொடக்க வீரர்கள் சுப்மான் கில், ருத்துராஜ் ஜோடி சிறப்பாக ஆடியது. கில் 74 ரன்களுக்கும், ருத்துராஜ் 71 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். பின்னர் ஷ்ரேயாஸ் அய்யரும் 3 ரன்னுக்கு ரன் அவுட்டாக, பின்னர் வந்த கேப்டன் கே.எல்.ராகுல் (58 ரன்கள் ) நிதான ஆட்டம் ஆடி இறுதிவரை களத்தில் இருந்து அணியை வெற்றி பெற வைத்தார்.

அவருக்கு உறுதுணையாக ஆடிய சூரியகுமார் 50 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார், இறுதியில் இந்திய அணி 48.4 ஓவர்களில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது 5 விக்கெட் வீழ்த்திய ஷமிக்கு வழங்கப்பட்டது.

banner

Related Stories

Related Stories