விளையாட்டு

"ரசிகர்கள் நினைக்கும் அளவுக்கு டிராவிட்க்கு அதிக அதிகாரம் எல்லாம் கிடையாது"- சஞ்சய் மஞ்ரேக்கர் கருத்து !

ரசிகர்கள் நினைக்கும் அளவுக்கு பெரிய அதிகாரம் ராகுல் டிராவிட்க்கு இல்லை என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார்.

"ரசிகர்கள் நினைக்கும் அளவுக்கு டிராவிட்க்கு அதிக அதிகாரம் எல்லாம் கிடையாது"- சஞ்சய் மஞ்ரேக்கர் கருத்து !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பையை 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கைப்பற்றியது. அதன்பின் 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை தோனி தலைமையிலான அணி வென்றது.

தற்போது 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இதனால் இப்போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடர் அக்டோபர் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 19ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த உலகக்கோப்பையை இந்திய அணி வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்த வண்ணம் உள்ள நிலையில் ஆசிய கோப்பை தொடரில் வென்று இந்தியா இன்னும் வலுவான அணியாக காட்சியளிக்கிறது. அதே நேரம் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அணி வீரர்களை அடிக்கடி மாற்றுவதால் இந்திய அணி இன்னும் செட்டில் ஆகவில்லை என விமர்சிக்கப்படுகிறது. மேலும், முக்கிய வீரர்களுக்கு அடிக்கடி ஓய்வு அளிக்கப்படுவதால் அவர்களால் உலககோப்பைக்கு தயாராக முடியாமல் இருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

"ரசிகர்கள் நினைக்கும் அளவுக்கு டிராவிட்க்கு அதிக அதிகாரம் எல்லாம் கிடையாது"- சஞ்சய் மஞ்ரேக்கர் கருத்து !

இந்த நிலையில், ரசிகர்கள் நினைக்கும் அளவுக்கு பெரிய அதிகாரம் ராகுல் டிராவிட்க்கு இல்லை என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார். இது குறித்துப் பேசியுள்ள அவர், " கிரிக்கெட் பயிற்சியாளர்கள் கால்பந்து பயிற்சியாளர்கள் கிடையாது. ரசிகர்கள் இருவரையும் ஒப்பிட்டு குழப்பமடைகிறார்கள். கால்பந்தில் பயிற்சியாளர்களுக்கு அதிக அதிகாரம் இருக்கும். ஆனால், கிரிக்கெட் பயிற்சியாளர்களுக்கு அதிக அதிகாரம் இருக்காது.

அவர்களால் அணியை தேர்வு செய்யும்போதே பெரிய மாற்றங்களை அவர்களால் செய்ய முடியாது. அணியின் வெற்றி, தோல்வியிலும் பயிற்சியாளரின் பங்கு குறைவாகவே இருக்கும். அதே நேரம் அணி தேர்வில், பயிற்சியாளரை விட தேர்வுக்குழு தலைவருக்கு தான் அதிக அதிகாரம் இருக்கிறது என்று நான் நம்புகிறேன். ஆகவே வீரர்கள் ஓய்வு குறித்த விவகாரத்தில் டிராவிட்டை விமர்சிக்க வேண்டாம்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories