விளையாட்டு

ஒருவழியாக ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. இளம்வீரரை சேர்ந்து Surprise கொடுத்த BCCI !

ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.

ஒருவழியாக ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. இளம்வீரரை சேர்ந்து Surprise கொடுத்த BCCI !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளதாக முன்பு அறிவிக்கப்பட்ட நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே இருக்கும் பிரச்சனை காரணமாக இந்தியா கலந்துகொள்ளுமா என்ற மிகப்பெரிய கேள்வி ஒன்று நிலவு வந்தது.இந்த சூழலில் 2022-2023 ஆம் ஆண்டிற்கான பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்தில் பாகிஸ்தானில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை தொடரை வேறு பொதுவான இடத்திற்கு மாற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி-யிடம் கோரிக்கை வைக்க முடிவு செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கையில், " ஆசிய கோப்பை தொடரை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென ஒருதலைபட்சமாக பிசிசிஐ கருத்து தெரிவித்துள்ளது 2023 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் 2024-2031 சுழற்சியில் இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஐசிசி தொடர்களின் பாகிஸ்தான் பங்கேற்பதை இக்கருத்துகள் பாதிக்கலாம்." என தெரிவிக்கப்பட்டது.

ஆனால், தனது முடிவில் இந்தியா உறுதியாக இருந்த காரணத்தால் வேறுவழியின்றி பாகிஸ்தான் இறங்கிவந்து இந்தியா விளையாடும் போட்டிகளை பொதுவான ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தவும், இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறினால் அதையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தவும் ஒப்புக்கொண்டு இது தொடர்பான அறிக்கையை ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு அனுப்பி வைத்தது .

ஆனால், இதனையும் பிசிசிஐ ஒப்புக்கொள்ளாமல் ஆசிய கோப்பை போட்டிகளை பாகிஸ்தானில் அல்லாது பொதுவான இடத்தில் நடத்த கோரிக்கை விடுத்தது. இதற்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில் இடம்பெற்றுள்ள வாரியங்கள் ஒப்புக்கொண்ட நிலையில், இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் பாகிஸ்தானில் சில போட்டிகளை நடத்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஒப்புக்கொள்ள வேறு வழியின்றி அதற்கு பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்தது.

ஒருவழியாக ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. இளம்வீரரை சேர்ந்து Surprise கொடுத்த BCCI !
Ramon Espinosa

இதன் காரணமாக ஆசிய கோப்பைக்கான அட்டவணை வெளியானதில் அதில், ஒன்பது ஆட்டங்கள் இலங்கையில் நடத்தப்பட உள்ள நிலையில், வெறும், நான்கு ஆட்டங்கள் மட்டுமே பாகிஸ்தானில் நடைபெறவுள்ளன.

இந்த நிலையில், தற்போது இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்த அணியில் ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அணி விவரம், ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, சுப்மன் கில், விராட் கோலி, கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஷ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாகூர், முகமது ஷமி, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, சஞ்சு சாம்சன் (காத்திருப்பு வீரர்). இந்த அணியில் பலரும் எதிர்பாக்காத விதமாக இளம் வீரர் திலக் வர்மா இடம்பெற்றுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories