விளையாட்டு

ரசிகர்களுக்கு தெரிந்தது இப்போதுதான் பயிற்சியாளருக்கு தெரிகிறதுபோல - அணி குறித்து டிராவிட் கூறியது என்ன?

கடைசி வரை பேட்டிங் ஆழம் என்பதை விரும்புகிறோம் என இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.

ரசிகர்களுக்கு தெரிந்தது இப்போதுதான் பயிற்சியாளருக்கு தெரிகிறதுபோல -  அணி குறித்து டிராவிட் கூறியது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை வென்றது. ஆனால் டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் பறிகொடுத்தது. இதனால் இந்திய அணியை பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.

அதிலும், எளிதாக வெற்றிபெற வேண்டிய போட்டிகளில் கூட இறுதிக்கட்டத்தில் இந்திய அணி மோசமாக செயல்பட்டது. இந்த தோல்விக்கு இந்திய அணியின் மோசமான பேட்டிங் ஆர்டரே காரணமாக கூறப்பட்டது. இளம்வீரர்கள் தொடர்ந்து சொதப்பினர்.

அதே நேரம் கீழ்வரிசையில் பேட்டிங் செய்த ஆள் இல்லாததும் இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. இதனால் நடுவரிசை வீரர்களுக்கு அதிக அழுத்தம் ஏற்பட்டு அவர்கள் எளிதாக தங்கள் விக்கெட்டுகளை இழந்தனர்.

ரசிகர்களுக்கு தெரிந்தது இப்போதுதான் பயிற்சியாளருக்கு தெரிகிறதுபோல -  அணி குறித்து டிராவிட் கூறியது என்ன?

இந்த நிலையில், கடைசி வரை பேட்டிங் ஆழம் என்பதை இப்போது நாங்கள் முனைப்பாக்க விரும்புகிறோம் என இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், " அணிக்கு இன்னும் சில இடங்களில் முன்னேற்றம் தேவைப்படுகிறது. அந்த வகையில் கடைசி வரை பேட்டிங் ஆடுவோர் அணிக்கு தேவைப்படுகின்றனர்.

கடைசி வரை பேட்டிங் ஆழம் என்பது இப்பொது தேவை, ஆனால் அதற்காக பந்து வீச்சை பலவீனப்படுத்த முடியாது. ஆனால் கடைசி வரை பேட்டிங் தேவை என்ற அவசியமும் இப்போது ஏற்பட்டுள்ளது. பெரிய ஸ்கோர் வர கடைசி வரை பேட்டிங் அவசியம். மேற்கிந்திய தீவுகள் அணியில் அல்சாரி ஜோசப் வரை பேட் செய்கிறார்கள். இந்த தொடர் நமக்குக் கற்பித்த பாடம் என்னவெனில் அணியின் பேட்டிங் வரிசையில் ஆழம் வேண்டும்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories