விளையாட்டு

ஜெய்ஸ்வாலை அணியில் இருந்து நீக்க வேண்டும்.. தேர்வுக் குழுவுக்கு பரிந்துரை செய்த கங்குலி.. காரணம் என்ன ?

இளம்வீரர் ஜெய்ஸ்வாலை இந்திய அணியில் இருந்து நீக்க வேண்டும் என தேர்வுக் குழுவுக்கு கங்குலி பரிந்துரை செய்துள்ளார்.

ஜெய்ஸ்வாலை அணியில் இருந்து நீக்க வேண்டும்.. தேர்வுக் குழுவுக்கு பரிந்துரை செய்த கங்குலி.. காரணம் என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இந்த தொடர் அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதனால் இப்போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இதில் ஒரு சிக்கல் ஏற்பட்டது.

ஏனெனில் 19-வது ஆசிய விளையாட்டு போட்டிகள், சீனாவில் வருகின்ற செப்டம்பர் 23ம் தேதி முதல் அக்டோபர் எட்டாம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் கிரிக்கெட் போட்டியும் சேர்க்கப்பட்டுள்ளது. ஒன்பது ஆண்டுகளுக்கு பின்னர் ஆசிய விளையாட்டு போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அதில் இந்திய அணி கலந்துகொண்டால் தங்கப்பதக்கம் வெல்லும் வாய்ப்பும் இந்திய அணிக்கு உள்ளது.

இதனால் இதில் இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனால் ,அந்த நாட்களில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளதால் அதில் இந்திய அணி பங்கேற்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிலும் ஆடவர் அணியின் பங்கேற்பு குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பிசிசிஐ-யின் உயர்மட்ட குழு கூட்டத்தில் ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கு இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணியை அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணிக்கு இளம்வீரர் ருத்துராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் பல இளம்வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.

ஜெய்ஸ்வாலை அணியில் இருந்து நீக்க வேண்டும்.. தேர்வுக் குழுவுக்கு பரிந்துரை செய்த கங்குலி.. காரணம் என்ன ?

இந்த நிலையில், இந்த அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரர் ஜெய்ஸ்வாலை நீக்கிவிட்டு அவரை உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் சேர்க்கவேண்டும் என இந்திய முன்னாள் கேப்டன் கங்குலி கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், "சமீபத்திய ஐபிஎல் தொடரில் ஜெய்ஸ்வாலை நான் மிகவும் அருகிலிருந்து பார்த்துள்ளேன். அதில் அவர் சிறப்பாக ஆடினார். அதன்பின்னர் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்டிலும் அவர் சிறப்பாக ஆடி வருகிறார். இதனால் அவர் இந்தியாவுக்கு நீண்ட காலம் விளையாடுவதற்கு தேவையான தரத்தைக் கொண்டுள்ளார்.

பொதுவாகவே டாப் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேன்கள் இருப்பது அணிக்கு சாதகமானது. அப்படி இருத்தல் எதிரணி பவுலர்கள் அடிக்கடி தங்களுடைய லென்த்தை வலுக்கட்டாயமாக மாற்ற வேண்டிய அழுத்தத்தை அவர்களுக்கு ஏற்படுத்தும். இதனால் ஆசிய கோப்பை அணியிலிருந்து வெளியே எடுத்து அவரை உலகக் கோப்பை அணியில் தேர்வு செய்ய தேர்வு குழுவினர் கருத்தில் கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories