விளையாட்டு

"மோசமான நிலை வரும்போது நான் இதைத்தான் செய்கிறேன்" - WINDIES போட்டியில் சாதித்தபின் அஸ்வின் கூறியது என்ன ?

சிறந்த தேடல்தான் என்னை எப்போதும் நல்ல நிலையில் வைத்திருக்கிறது என அஸ்வின் கூறியுள்ளார்.

"மோசமான நிலை வரும்போது நான் இதைத்தான் செய்கிறேன்" - WINDIES போட்டியில் சாதித்தபின் அஸ்வின் கூறியது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

டெஸ்ட் போட்டிகளுக்கென உருவாக்கப்பட்ட 'உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்' ன் இறுதிப்போட்டிக்கு இரண்டாவது முறையாக இந்திய அணி முன்னேறியது.கடந்த முறை முதல்முறை கடந்த முறை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்து சாம்பியன் பட்டத்தை இழந்தது.

இதனால் இந்திய அணி இந்த முறையும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதால் இம்முறை இந்திய அணி கோப்பையை வெல்லும் என இந்திய ரசிகர்கள் பெரும் ஆவலோடு காத்திருந்தனர்.ஆனால் இந்திய ரசிகர்களின் இந்த ஆசைக்கு ஆஸ்திரேலியா அணியின் அபார ஆட்டம் முடிவு கட்டியது. இந்திய அணி இறுதிப்போட்டியில் மோசமாகத் தோற்றது.

இந்திய அணி தோல்வியைத் தழுவியதற்கு உலகின் நம்பர் 1 பந்துவீச்சாளரான அஸ்வினை அணியில் சேர்க்காதது முக்கிய காரணமாகப் பார்க்கப்பட்டது. சச்சின் உள்ளிட்ட பல்வேறு முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் இதனை குறிப்பிட்டு இந்திய அணியை விமர்சித்திருந்தனர்.

"மோசமான நிலை வரும்போது நான் இதைத்தான் செய்கிறேன்" - WINDIES போட்டியில் சாதித்தபின் அஸ்வின் கூறியது என்ன ?

இந்த தொடருக்கு பின்னர் இந்திய அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் பங்கேற்க அந்த நாட்டுக்கு சென்றுள்ளது. இதன் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் அபாரமான பந்துவீசிய அஸ்வின் 5 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் அஸ்வின் 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக திகழ்ந்தார்.

முன்னதாக முதல் இன்னிங்ஸ் முடிவில் பேசிய அஸ்வின், இந்த உலகில் யாரும் தாழ்வுகள் இல்லாமல் உயர்ந்த நிலைக்குச் சென்றதில்லை. தாழ்வு நிலை வரும்போது இரண்டே விருப்பங்கள் தான் இருக்கும். ஒன்று துக்கத்தோடு இருந்து அதைப் பற்றி புகார் செய்து தொடர்ந்து அதோடு செல்வது. மற்றொன்று அதிலிருந்து கற்றுக்கொண்டு அதை விட சிறப்பாக செயல்படுவது. நான் இரண்டாவது இருப்பதைதான் செய்கிறேன். சிறந்த தேடல்தான் என்னை எப்போதும் நல்ல நிலையில் வைத்திருக்கிறது"என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories