விளையாட்டு

"சேப்பாக்கத்துக்கு மஞ்சள் ஜெர்சியில் வந்துவிடாதீர்கள்" - தினேஷ் கார்த்திக் வேண்டுகோள்.. காரணம் என்ன ?

இந்திய முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக், ரசிகர்கள் வழக்கம்போல சேப்பாக்கம் மைதானத்துக்கு மஞ்சள் ஜெர்சியில் வந்துவிடாதீர்கள் என ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

"சேப்பாக்கத்துக்கு மஞ்சள் ஜெர்சியில் வந்துவிடாதீர்கள்" - தினேஷ் கார்த்திக் வேண்டுகோள்.. காரணம் என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பையை 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கைப்பற்றியது. அதன்பின் 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை தோனி தலைமையிலான அணி வென்றது.

தற்போது 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இதனால் இப்போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உலகக் கோப்பைக்கான போட்டி அட்டவணையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அக்டோபர் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 19ம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகிறது.

"சேப்பாக்கத்துக்கு மஞ்சள் ஜெர்சியில் வந்துவிடாதீர்கள்" - தினேஷ் கார்த்திக் வேண்டுகோள்.. காரணம் என்ன ?

முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இப்போட்டி குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. அதேபோல் இறுதிப்போட்டியும் இதே மைதானத்தில்தான் நடைபெறுகிறது. அதோடு முக்கியமாக இந்தியா-பாகிஸ்தான் மோதலும் இதே மைதானத்தில்தான் நடைபெறுகிறது.

இந்த தொடரில் இந்தியா ஆடும் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த நிலையில், இந்திய முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக், ரசிகர்கள் வழக்கம்போல சேப்பாக்கம் மைதானத்துக்கு மஞ்சள் ஜெர்சியில் வந்துவிடாதீர்கள் என ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் இதுகுறித்து பேசிய அவர், "சென்னை சேப்பாக்கத்தில்தான் இந்திய அணி மோதும் உலகக்கோப்பையின் முதல் போட்டி நடக்கவிருக்கிறது. மறந்துவிடாதீர்கள், இந்த போட்டியில், ஆஸ்திரேலிய அணி மஞ்சள் ஜெர்சியில்தான் ஆடுவார்கள். அதனால் வழக்கம்போல ரசிகர்கள் CSK அணிக்கு ஆதரவு தெரிவிப்பது போல மஞ்சள் ஜெர்சியில் வந்துவிடாதீர்கள். நீல ஜெர்சியை அணிந்து கொண்டு அலைகடலென திரண்டு வந்து ஆதரவு தெரிவியுங்கள்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories