விளையாட்டு

"எங்களுக்கு போட்டியாக உலகில் யாருமே இல்லை, எங்களை யாரும் அச்சுறுத்த முடியாது"- IPL சேர்மன் அதிரடி பேச்சு!

ஐபிஎல் தொடருக்கு போட்டியாக உலகளவில் யாருமே இல்லை என்றும், ஐபிஎல் தொடருக்கு யாராலும் அச்சுறுத்தல் இல்லை என்றும் ஐபிஎல் சேர்மன் அருண் சிங் துமால் கூறியுள்ளார்.

"எங்களுக்கு போட்டியாக உலகில் யாருமே இல்லை, எங்களை யாரும் அச்சுறுத்த முடியாது"- IPL சேர்மன் அதிரடி பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர்தான். ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பிசிசிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.

ஆரம்பத்தில் லாபம் கிடைக்குமா? என தயங்கி ஐபிஎல்லில் முதலீடு செய்த அணி உரிமையாளர்கள் இப்போது போட்டதை விட பல மடங்கு லாபம் பார்த்துள்ளனர். அதோடு இதில் முதலீடு செய்யும் ஸ்பான்சர்களும் வணிக ரீதியாக லாபம் அடைந்து வருகின்றனர்.

"எங்களுக்கு போட்டியாக உலகில் யாருமே இல்லை, எங்களை யாரும் அச்சுறுத்த முடியாது"- IPL சேர்மன் அதிரடி பேச்சு!

ஐபிஎல் தொடரின் வெற்றியைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை,வங்கதேசம் போன்ற பல்வேறு நாடுகளில் ஐபிஎல் பாணியில் கிரிக்கெட் தொடர்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அங்கும் அவை வணிக ரீதியாக வெற்றியை பெற்றுவருகின்றன.

அதைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகமும், அமெரிக்க கிரிக்கெட் சங்கமும் தங்கள் நாட்டிலும் கிரிக்கெட் லீக்கினைத் தொடங்கியுள்ளன. மேலும், பல்வேறு நாடுகளிலும் வரும்காலத்தில் ஐபிஎல் பாணியிலான கிரிக்கெட் தொடர்கள் நடைபெறும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

"எங்களுக்கு போட்டியாக உலகில் யாருமே இல்லை, எங்களை யாரும் அச்சுறுத்த முடியாது"- IPL சேர்மன் அதிரடி பேச்சு!

இந்த நிலையில், ஐபிஎல் தொடருக்கு போட்டியாக உலகளவில் யாருமே இல்லை என்றும், ஐபிஎல் தொடருக்கு யாராலும் அச்சுறுத்தல் இல்லை என்றும் ஐபிஎல் சேர்மன் அருண் சிங் துமால் கூறியுள்ளார். இது தொடர்பாகப் பேசிய அவர், "ஐபிஎல் தொடருக்கு போட்டியாக நாங்கள் வேறு யாரையும் பார்க்கவில்லை. தற்போது ஐபிஎல்-க்கு அருகில் யாருமே இல்லை. சொந்தமாக டி20 லீக் தொடர் தொடங்கும் கிரிக்கெட் வாரியங்களுக்கும் வாழ்த்துக்கள், ஆனால் அவர்களில் யாரும் ஐபிஎல் தொடருக்கு அச்சுறுத்தலாக இருக்க முடியாது.

தற்போது ஐபிஎல் தொடரில் அணிகள் இருபிரிவாக பிரித்து சில அணிகளுடன் மட்டும் ஒரு போட்டி விளையாடும் நிலை இருக்கிறது. வரும்காலத்தில் அனைத்து அணிகளுடனும் இரண்டு போட்டிகளில் விளையாடும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. இதனால் ஐபிஎல் போட்டிகளின் எண்ணிக்கை 74 இல் இருந்து 100 ஆக மாறும். இது குறித்து முடிவெடுக்க ஐபிஎல் உரிமையாளர்களிடம் கலந்தாலோசிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories