விளையாட்டு

"ஓய்வை அறிவிக்க இதுதான் சரியான நேரம்,, ஆனாலும்"- வெற்றிக்கு பின்னர் ஓய்வு குறித்து தோனி கூறியது என்ன?

பரிசளிப்பு நிகழ்ச்சியில் சென்னை அணி கேப்டன் எம்.எஸ்.தோனி வர்ணனையாளரிடம் இந்த வெற்றி குறித்தும் அடுத்த ஐபிஎல் தொடர் குறித்தும் பேசினார்.

"ஓய்வை அறிவிக்க இதுதான் சரியான நேரம்,, ஆனாலும்"-  வெற்றிக்கு பின்னர் ஓய்வு குறித்து தோனி கூறியது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

16-வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு நடப்பு சாம்பியன் குஜராத் அணியும் 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் முன்னேறின. இறுதிப்போட்டி கடந்த 28ஆம் தேதி விளையாடுவதாக இருந்த நிலையில், அகமதாபாத் மைதானத்தில் அன்றைய தினம் முழுவதும் மழை பெய்ததால் போட்டி அடுத்த நாளுக்கு மாற்றி வைக்கப்பட்டது.

அதன்படி நேற்று போட்டி நடைபெற்ற நிலையில், டாஸ் வென்று சென்னை கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்ய, குஜராத் அணி களமிறங்கியது. கில் தோனியின் அபார ஸ்டம்பிங்கில் கில் ஆட்டமிழக்க அதன்பின்னர் ஜோடி சேர்ந்த சாஹா மற்றும் சாய் சுதர்ஷன் ஆகியோரின் அதிரடியால் குஜராத் அணி 20 ஓவர்களுக்கு 214 ரன்களை குவித்தது. அதிலும் ஆரம்பத்தில் மெதுவாக ஆரம்பித்த தமிழ்நாட்டை சேர்ந்த சாய் சுதர்ஷன் இறுதிக்கட்டத்தில் ருத்ரதாண்டவம் ஆடினார். சதமடிப்பார் என் எதிர்பாக்கப்பட்ட நிலையில் அவர் 96 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

"ஓய்வை அறிவிக்க இதுதான் சரியான நேரம்,, ஆனாலும்"-  வெற்றிக்கு பின்னர் ஓய்வு குறித்து தோனி கூறியது என்ன?

தொடர்ந்து 215 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணி 4 ரன்கள் இருந்த நிலையில், மழை குறுக்கிட்டதால் போட்டி தடைபட்டது. மழை நின்ற பிறகு மைதானத்தை ஆய்வு செய்த நடுவர்கள் 15 ஓவர்களாக போட்டி குறைக்கப்படுவதாக தெரிவித்தனர். அதோடு டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 15 ஓவர்களுக்கு 171 ரன்கள் என்ற இலக்குடன் வெற்றியை நோக்கி களமிறங்கியது சென்னை அணி. தொடக்க வீரர்கள் கெய்க்வாட், கான்வே சிறப்பான தொடக்கத்தை கட்டமைத்து, பவர் பிளேயில் சிக்சரும், பவுண்டரியுமாக விளாசி அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்தினர்.

ஆனால், நூர் அஹமது வீசிய ஒரே ஒவரில் கெய்க்வாட், கான்வே அடுத்தடுத்து ஆட்டமிழக்க ரசிகர்கள் மீண்டும் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து வந்த துபே , ரஹானே, ராயுடு போன்ற வீரர்கள் தங்கள் பங்குக்கு சிக்சர், பவுண்டரி விளாசி சரிவிலிருந்து அணியை மீட்டு வெற்றிப் பாதையை நோக்கி அழைத்து சென்றனர்.

"ஓய்வை அறிவிக்க இதுதான் சரியான நேரம்,, ஆனாலும்"-  வெற்றிக்கு பின்னர் ஓய்வு குறித்து தோனி கூறியது என்ன?

இறுதியில் 6 பந்துகளுக்கு 13 ரன்கள் தேவை என்ற சூழலில் மோஹித் சர்மா முதல் 4 பந்துகளை யார்க்கராக வீச அதில் 3 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் கடைசி இரண்டு பந்துகளுக்கு 10 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. மொஹித் சர்மா வீசிய 5வது பந்தை ஜடேஜா சிக்சரை நோக்கி பறக்க விட்டார். தொடர்ந்து கடைசி பந்துக்கு 4 ரன்கள் தேவைபட்ட நிலையில், அந்த பந்தை ஜடேஜா 4 ரன்கள் விளாச 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை அணி, 5வது முறையாக ஐபிஎல் சாம்பியன் கோப்பையை தட்டிச்சென்றது.

"ஓய்வை அறிவிக்க இதுதான் சரியான நேரம்,, ஆனாலும்"-  வெற்றிக்கு பின்னர் ஓய்வு குறித்து தோனி கூறியது என்ன?

இந்த போட்டிக்கு பிறகு பரிசளிப்பு நிகழ்ச்சியில் சென்னை அணி கேப்டன் எம்.எஸ்.தோனி வர்ணனையாளரிடம் இந்த வெற்றி குறித்தும் அடுத்த ஐபிஎல் தொடர் குறித்தும் பேசினார். அப்போது " இதுதான் என் ஓய்வை அறிவிக்கச் சரியான நேரமாக இருந்திருக்கும். இப்படியே விடைபெறுவது எளிதான விஷயமாக இருக்கும். அடுத்த 9 மாதங்கள் கடுமையாக உழைத்து இன்னொரு சீசன் ஆட முயற்சி செய்வது பெரிய சவால். என் உடல் அதற்கு ஒத்துழைக்குமா என்பது தெரியவில்லை. ஆனால், ரசிகர்கள் என் மீது காண்பித்த அன்பிற்கு இன்னும் ஒரு சீசன் அவர்களுக்காக விளையாடுவதுதான்.என்னால் அவர்களுக்குத் திருப்பி தரக்கூடிய பரிசசாக இருக்கும். முதல் சிஎஸ்கே போட்டியின் போது அனைவரும் என் பெயரைக் கோஷமிடும்போது என் கண்கள் கலங்கின. என்னை அமைதிப்படுத்திக்கொள்ள டக்-அவுட்டிற்கு சென்றேன். அப்போதுதான் இதை நான் அனுபவிக்க வேண்டும் என்பது புரிந்தது. சில நேரங்களில் நானும் எமோஷனல் ஆவது உண்டு" எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories