விளையாட்டு

6,6,6,4,6 -ஆட்டத்தை மாற்றிய 6 பந்து.. இதயத் துடிப்பை எகிற வைத்த இறுதிப்போட்டி.. IPL கோப்பையை வென்றது CSK!

குஜராத் அணியை அந்த சொந்த மண்ணில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை அணி, 5வது முறையாக ஐபிஎல் சாம்பியன் கோப்பையை தட்டிச்சென்றது.

6,6,6,4,6 -ஆட்டத்தை மாற்றிய 6 பந்து.. இதயத் துடிப்பை எகிற வைத்த இறுதிப்போட்டி.. IPL கோப்பையை வென்றது CSK!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

16-வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு நடப்பு சாம்பியன் குஜராத் அணியும் 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் முன்னேறின. இறுதிப்போட்டி கடந்த 28ஆம் தேதி விளையாடுவதாக இருந்த நிலையில், அகமதாபாத் மைதானத்தில் அன்றைய தினம் முழுவதும் மழை பெய்ததால் போட்டி அடுத்த நாளுக்கு மாற்றி வைக்கப்பட்டது.

அதன்படி நேற்று போட்டி நடைபெற்ற நிலையில், டாஸ் வென்று சென்னை கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்ய, குஜராத் அணி களமிறங்கியது.குஜராத் அணி பேட்டிங்கின் போது சுப்மன் கில்லின் கேட்ச் மற்றும் ரன் அவுட்டை சென்னை வீரர்கள் தவறவிட, குஜராத் அணி அதனை தங்கள் அணிக்கு சாதகமாக்கி ரன்களை விளாசத் தொடங்கியது. அதன்பின் கில் தோனியின் அபார ஸ்டம்பிங்கில் கில் ஆட்டமிழக்க சென்னை ரசிகர்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.

6,6,6,4,6 -ஆட்டத்தை மாற்றிய 6 பந்து.. இதயத் துடிப்பை எகிற வைத்த இறுதிப்போட்டி.. IPL கோப்பையை வென்றது CSK!

ஆனால் அதன்பின்னர் ஜோடி சேர்ந்த சாஹா மற்றும் சாய் சுதர்ஷன் ஆகியோரின் அதிரடியால் குஜராத் அணி 20 ஓவர்களுக்கு 214 ரன்களை குவித்தது. அதிலும் ஆரம்பத்தில் மெதுவாக ஆரம்பித்த தமிழ்நாட்டை சேர்ந்த சாய் சுதர்ஷன் இறுதிக்கட்டத்தில் ருத்ரதாண்டவம் ஆடினார். சதமடிப்பார் என் எதிர்பாக்கப்பட்ட நிலையில் அவர் 96 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து 215 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணி 4 ரன்கள் இருந்த நிலையில், மழை குறுக்கிட்டதால் போட்டி தடைபட்டது. மழை நின்ற பிறகு மைதானத்தை ஆய்வு செய்த நடுவர்கள் 15 ஓவர்களாக போட்டி குறைக்கப்படுவதாக தெரிவித்தனர். அதோடு டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 15 ஓவர்களுக்கு 171 ரன்கள் என்ற இலக்குடன் வெற்றியை நோக்கி களமிறங்கியது சென்னை அணி. தொடக்க வீரர்கள் கெய்க்வாட், கான்வே சிறப்பான தொடக்கத்தை கட்டமைத்து, பவர் பிளேயில் சிக்சரும், பவுண்டரியுமாக விளாசி அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்தினர்.

6,6,6,4,6 -ஆட்டத்தை மாற்றிய 6 பந்து.. இதயத் துடிப்பை எகிற வைத்த இறுதிப்போட்டி.. IPL கோப்பையை வென்றது CSK!

ஆனால், நூர் அஹமது வீசிய ஒரே ஒவரில் கெய்க்வாட், கான்வே அடுத்தடுத்து ஆட்டமிழக்க ரசிகர்கள் மீண்டும் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து வந்த துபே , ரஹானே, ராயுடு என வீரர்கள் தங்கள் பங்குக்கு சிக்சர், பவுண்டரி விளாசி சரிவிலிருந்து அணியை மீட்டு வெற்றிப் பாதையை நோக்கி அழைத்து சென்றனர்.

ரஹானே 27 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், 12 மற்றும் 13-வது ஓவர் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. ரஷீத் கான் வீசிய 12வது ஓவரின் கடைசி இரு பந்துகளில் துபே சிக்ஸர் விலாச, அடுத்த மொஹித் சர்மா வீசிய 13-வது ஓவரின் முதல் 3 பந்துகளில் ராயுடு 6,4,6 என விளாசினார். அந்த 5 பந்தில் மட்டும் 28 ரன்கள் கிடைக்க ஆட்டம் சென்னை பக்கம் திரும்பியது.

6,6,6,4,6 -ஆட்டத்தை மாற்றிய 6 பந்து.. இதயத் துடிப்பை எகிற வைத்த இறுதிப்போட்டி.. IPL கோப்பையை வென்றது CSK!

ஆனால் அதே ஓவரில் தனது கடைசி ஐபிஎல் போட்டியில் 19ரன்கள் எடுத்து ராயுடு ஆட்டமிழக்க, ஒட்டுமொத்த ரசிகர்களும் எதிர்பார்த்த தோனி கம்பீரமாக களத்திற்குள் நுழைந்தார். ஆனால் மொஹித் சர்மாவின் பந்துவீச்சில் மில்லரிடம் வந்த வேகத்தில் டக் அவுட் ஆகி தோனி வெளியேற, ரசிகர்கள் சோகமடைந்தனர்.

அதன் பின்னர் குஜராத் அணி ஆட்டத்துக்குள் வர தொடர்ந்து ஷமி சிறப்பான வீசி 14-வது ஓவரில் 8 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் இறுதி 6 பந்துகளுக்கு 13 ரன்கள் தேவை என்ற சூழலில் மோஹித் சர்மா முதல் 4 பந்துகளை யார்க்கராக வீச அதில் 3 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் கடைசி இரண்டு பந்துகளுக்கு 10 ரன்கள் தேவை என்ற நிலையில் போட்டி அதன் உச்சகட்ட பரபரப்பை எட்டியது.

6,6,6,4,6 -ஆட்டத்தை மாற்றிய 6 பந்து.. இதயத் துடிப்பை எகிற வைத்த இறுதிப்போட்டி.. IPL கோப்பையை வென்றது CSK!

மொஹித் சர்மா வீசிய 5வது பந்தைஜடேஜா சிக்சரை நோக்கி பறக்க விட, அரங்கம் அதிரும் அளவிற்கு சென்னை ரசிகர்கள் உற்சாக குரலெழுப்பினர். தொடர்ந்து கடைசி பந்துக்கு 4 ரன்கள் தேவைபட்ட நிலையில், அந்த பந்தை ஜடேஜா 4 ரன்கள் விளாச அரங்கத்தை தாண்டி இந்தியாவே அதிர்ந்தது. இதன் மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை அணி, 5வது முறையாக ஐபிஎல் சாம்பியன் கோப்பையை தட்டிச்சென்றது.

வெற்றி பெற்றதும் கேமராக்கள் அனைத்தும் தோனியை நோக்கி திரும்ப தன்னை நோக்கி வந்த ஜடேஜாவை தூக்கி வைத்து ஆனந்த கண்ணீர் மல்க கொண்டாடினார் தோனி. 5வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை அணி, அதிக முறை கோப்பையை வென்ற மும்பை அணியுடன் இந்த சாதனையை சமன் செய்தது. மேலும், சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணிக்கு கோப்பையுடன் 20 கோடி ரூபாயும், 2வது இடம் பிடித்த குஜராத் அணிக்கு 13 கோடி ரூபாயும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

banner

Related Stories

Related Stories