விளையாட்டு

"இந்த அணியை வச்சிட்டு இது ஆச்சரியம்தான்? இதுதான் தோனி மேஜிக்" - முன்னாள் இந்திய வீரர் ஜாபர் புகழாரம் !

சென்னை அணி இந்த தொடரில் சிறப்பாக செயல்பட ஒரே காரணம் தோனி மட்டுமே என இந்திய முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கூறியுள்ளார்.

"இந்த அணியை வச்சிட்டு இது ஆச்சரியம்தான்? இதுதான் தோனி மேஜிக்" - முன்னாள் இந்திய வீரர் ஜாபர் புகழாரம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர்தான். ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பிசிசிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.

இதன் காரணமாக இதில் பங்கேற்க உலக நாடுகளின் வீரர்கள் தொடர்ந்து அணிவகுத்து வருகின்றனர். கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் குஜராத் அணி கோப்பையைக் கைப்பற்றியது. எனினும் ஐபிஎல் தொடரில் வெற்றிகரணமாக அணிகளாக சென்னை மற்றும் மும்பை அணிகள் வளம் வருகிறது.

"இந்த அணியை வச்சிட்டு இது ஆச்சரியம்தான்? இதுதான் தோனி மேஜிக்" - முன்னாள் இந்திய வீரர் ஜாபர் புகழாரம் !

அதிலும் தோனி தலைமையிலான சென்னை அணி இதுவரை இரண்டு முறை மட்டுமே அரையிறுதி,பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற தவறியுள்ளது. அந்த அளவுக்கு சென்னை அணி வலிமை வாய்ந்த அணியாக திகழ்கிறது. எனினும் கடந்த ஐபிஎல் தொடரில் 9-வது இடத்தையே பிடித்தது. இதனால் இந்த ஆண்டு சென்னை அணி சிறப்பான செயல்படும் என்று யாரும் நினைக்கவில்லை.

பல்வேறு முன்னாள் வீரர்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்பில் சென்னை பிளே ஆஃப் சுற்றுக்கே செல்லாது என்றுதான் கூறப்பட்டிருந்தது. அதற்கு ஏற்க சென்னை அணியில் பெரிய பந்துவீச்சாளர்கள் இல்லாதது குறையாக பட்டது. ஆனால், அனைவரும் வியக்கும் வண்ணம் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்ட சென்னை அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. மேலும், குவாலிபையர் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

"இந்த அணியை வச்சிட்டு இது ஆச்சரியம்தான்? இதுதான் தோனி மேஜிக்" - முன்னாள் இந்திய வீரர் ஜாபர் புகழாரம் !

இந்த நிலையில் சென்னை அணி இந்த தொடரில் சிறப்பாக செயல்பட ஒரே காரணம் தோனி மட்டுமே என இந்திய முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கூறியுள்ளார். இது தொடர்பாகப் பேசிய அவர், " இந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றதே பெரிய ஆச்சரியம் தான். பந்துவீச்சில் போதிய பலம் இல்லாத சென்னை அணி, புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்ததற்கு ஒரே காரணம் தோனி மட்டுமே. சென்னை அணியின் பந்துவீச்சாளர்கள், பந்துவீச்சில் திணறி வந்தனர், ஆனால் சென்னை அணியில் நிலவி வந்த அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்து சென்னை அணியை, தோனி இறுதி போட்டி வரை அழைத்து வந்துள்ளார். இது தோனியின் மேஜிக் தான்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories