விளையாட்டு

”இது இனிதான மாம்பல சீசன்” - கோலியை கிண்டல் செய்த லக்னோ வீரர் நவீனை கலாய்த்த மும்பை வீரர்கள் !

கோலியை கிண்டல் செய்த நவீனுக்கு பதில் கொடுக்கும் வகையிலே மும்பை வீரர்கள் புகைப்படத்தை பகிர்ந்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

”இது இனிதான மாம்பல சீசன்” - கோலியை கிண்டல் செய்த லக்னோ வீரர் நவீனை கலாய்த்த மும்பை வீரர்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் லீக் சுற்றில் லக்னோ மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதிய ஆட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக பெங்களூருவில் இந்த அணிகள் மோதிய போட்டியில் லக்னோ அணி வெற்றிபெற்றிருந்தது.

அப்போது வென்ற மகிழ்ச்சியில் லக்னோ வீரர் ஆவேஷ் கான் ஹெல்மெட்டை எரிந்து வெற்றியை கொண்டாடியது மற்றும் லக்னோ பயிற்சியாளர் காம்பிர் ரசிகர்கள் அமைதியாக இருக்கும்படி செய்கை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் இந்த ஆட்டம் முக்கியத்துவம் பெற்றது.

”இது இனிதான மாம்பல சீசன்” - கோலியை கிண்டல் செய்த லக்னோ வீரர் நவீனை கலாய்த்த மும்பை வீரர்கள் !

இந்த போட்டியில் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்த போட்டியின்போது பெங்களூரு அணி பீல்டிங் செய்துகொண்டிருந்தபோது லக்னோ அணி வீரர் நவீன் உல் காஹ்க்கும் கோலிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது விராட் கோலி தனது ஷூவை தாக்கி அதில் உள்ள தூசுதான் நீ என நவீன் உல் காஹ்க்கை நோக்கி காட்டியதுபோல காட்சி இடம்பெற்றது.

பின்னர் இந்த போட்டி முடிந்ததும் வீரர்கள் கைகுலுக்கியபோது லக்னோ வீரர் நவீன் உல் காஹ் மற்றும் விராட் கோலி ஆகியோர் ஆக்ரோஷமாக பேசிக்கொண்டனர். பின்னர் லக்னோ வீரர் கையில் மேயர்ஸ் விராட் கோலியோடு பேசிக்கொண்டிருந்த நிலையில், அவரை காம்பிர் பேசவேண்டாம் என்பதுபோல இழுத்துச்சென்றார்.இதனால் ஆத்திரம் அடைந்த விராட் கோலி காம்பிரிடம் ஏதோ கூற கோலிக்கும் காம்பிருக்கும் இடையே அங்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே இரு அணி வீரர்களும் இருவரையும் கட்டுப்படுத்தி அங்கிருந்து அழைத்துச்சென்றனர்.

”இது இனிதான மாம்பல சீசன்” - கோலியை கிண்டல் செய்த லக்னோ வீரர் நவீனை கலாய்த்த மும்பை வீரர்கள் !

இதனிடையே நவீன் மற்றும் கோலி இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டுவர லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல் முயற்சி செய்தார். நவீனிடம் சென்று கோலியுடன் சமாதானமாக செல்ல அவர் கோரிக்கை விடுத்த நிலையில், அதற்கு நவீன் உல் ஹாக் மறுத்து அங்கிருந்து நகர்ந்தார். இதனால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.

அதன்பின்னர் நடைபெற்ற பெங்களூர் - மும்பை அணிகள் மோதிய போட்டியில் பெங்களூர் அணி தோல்வியை சந்தித்தது. அப்போது விராட் கோலி ஆட்டமிழந்த பின்னர் லக்னோ வீரர் நவீன் உல் அக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இனிப்பான மாம்பழம் என குறிப்பிட்டு கோலியை கிண்டல் செய்யும் விதமாக ஸ்டோரியை பதிவிட்டிருந்தார்.

”இது இனிதான மாம்பல சீசன்” - கோலியை கிண்டல் செய்த லக்னோ வீரர் நவீனை கலாய்த்த மும்பை வீரர்கள் !

இந்த மோதலுக்கு பின்னர் லக்னோ அணி விளையாடும் போட்டியில் எல்லாம் ரசிகர்கள் கோலி கோலி என அவரை கிண்டல் செய்தனர். இந்த நிலையில், நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் மும்பை அணி லக்னோ அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இந்த போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் லக்னோ அணி தொடரில் இருந்து வெளியேறியது.

இந்த நிலையில், இந்த போட்டி முடிந்ததும் மும்பை வீரர்கள் விஷ்ணு வினோத், சந்தீப் வாரியர் மற்றும் குமார் கார்த்திகேயா ஆகியோர் மாம்பழத்தை நடுவில் வைத்து ஒருவர் கண்களையும், மற்றொருவர் வாயையும், மற்றொருவர் காதையும் மூடி இருப்பது போல போஸ் கொடுத்துள்ளனர். மேலும் ‘மாம்பழங்களின் இனிதான பருவம்’ என இதற்கு சந்தீப் வாரியார் தலைப்பிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை குறிப்பிட்டு கோலியை கிண்டல் செய்த நவீனுக்கு பதில் கொடுக்கும் வகையிலே இவ்வாறு புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories