விளையாட்டு

மீண்டும் கோலி மீதான வன்மத்தை கக்கினாரா கங்குலி ? -விமர்சித்து தள்ளும் ரசிகர்கள்.. பின்னணி என்ன ?

வேண்டும் என்றே கங்குலி கோலியின் பெயரை குறிப்பிடவில்லை என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

மீண்டும் கோலி மீதான வன்மத்தை கக்கினாரா கங்குலி ? -விமர்சித்து தள்ளும் ரசிகர்கள்.. பின்னணி என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் டி-20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தது. அந்தத் தொடருக்கு முன்பு திடீரென டி-20 அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அந்த உலகக் கோப்பையே இந்திய டி-20 அணிக்கு தான் தலைமை வகிக்கும் கடைசித் தொடர் என்று கூறினார். ஒருநாள் மட்டும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தக் காத்திருப்பதாகவும் கூறியிருந்தார்.

அவர் தலைமையிலான அணி தொடர்ந்து ஐ.சி.சி தொடர்களை வெற்றி பெறத் தவறியதால் அவர் மீது தொடர்ந்து விமர்சனம் எழுந்துகொண்டே இருந்தது. அதனால், இந்த முடிவை எடுத்திருப்பார் என்று கருதப்பட்டது. அந்த முடிவை அறிவித்த சில நாள்களிலேயே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஐ.பி.எல் அணியின் கேப்டன் பதவியிலிருந்தும் அந்த சீசனோடு விலகுவதாகக் கூறினார்.

மீண்டும் கோலி மீதான வன்மத்தை கக்கினாரா கங்குலி ? -விமர்சித்து தள்ளும் ரசிகர்கள்.. பின்னணி என்ன ?

கோலி பதவி விலகியதும் இந்திய டி-20 அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா நியமிக்கப்பட்டார்.இருந்தாலும், ஒருநாள் அணிக்கு கேப்டனாகத் தொடர கோலி விருப்பம் தெரிவித்திருந்ததால் எந்த மாற்றமும் நிகழாது என்று கருதப்பட்டது. ஆனால், தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை அறிவிக்கும்போது, ரோஹித்தை டி-20 மற்றும் ஒருநாள் அணிக்கான கேப்டனாக அதிகாரபூர்வமாக அறிவித்தது பிசிசிஐ.

அந்த அறிவிப்பு பெரிய சர்ச்சையை ஏற்படுத்த, “கோலியை டி-20 கேப்டன் பதவியிலிருந்து விலகவேண்டாம் என்று கேட்டுக்கொண்டோம். ஆனால், அவர் அதைக் கேட்கவில்லை. வைட் பால் கிரிக்கெட்டின் இரண்டு ஃபார்மட்டுக்கு இரண்டு கேப்டன்கள் இருப்பது சரியான முடிவில்லை என்று கருதியதால், செலக்டர்கள் இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள்” என்று அதுபற்றிக் கூறினார் அப்போதைய பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி.

மீண்டும் கோலி மீதான வன்மத்தை கக்கினாரா கங்குலி ? -விமர்சித்து தள்ளும் ரசிகர்கள்.. பின்னணி என்ன ?

ஆனால், அதை மறுத்த விராட் கோலி “நான் பதவி விலகுகிறேன் என்று சொன்னபோது யாரும் அதற்கு மறுப்புச் சொல்லவில்லை. எல்லோரும் ஏற்றுக்கொள்ளவே செய்தனர். அறிவிப்புக்கு ஒன்றரை மணி நேரம் முன்புதான் அவர்கள் முடிவு தனக்குத் தெரிவிக்கப்பட்டது" என்று கூறினார். இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.அதன் பின்னர் சமீபத்தில் பிசிசிஐ தேர்வுக்குழு தலைவராக இருந்த சேத்தன் ஷர்மா பிசிசிஐ தலைவராக இருந்த கங்குலிக்கு விராட் கோலியை பிடிக்கவில்லை என்றும் இதுவே கோலியின் கேப்டன்ஸி பறிப்புற்கு காரணமாக இருந்தது என்றும் கூறியது பெரும் பரபரப்பை ஏறபடுத்தியது.

அதனைத் தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் டெல்லி பெங்களூரு அணிகள் மோதிய ஐபிஎல் போட்டியில் கங்குலி மற்றும் கோலி கைகுலுக்காததும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தற்போது மீண்டும் கங்குலி -கோலி விவகாரம் வெடித்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடைசி ஐபிஎல் லீக் போட்டியில் பெங்களூரு மற்றும் குஜராத் அணிகள் மோதின. இதில், பெங்களுரு அணியின் நட்சத்திர வீரர் கோலி சதமடித்து அசத்தினார். மேலும், அதற்கு முந்தைய போட்டியிலும் சதமடித்தார். அதே பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் குஜராத் வீரர் சுப்மன் கில்லும் சதமடித்தார். கோலியை போல அவரும் தனது முந்தைய போட்டியில் சதமடித்திருந்தார்.

அதன்பின்னர் இருவருக்கும் பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி மட்டும் சுப்மன் கில் மற்றும் ஹைதராபாத்துக்கு எதிராக சதமடித்த கேமரூன் கிரீன் ஆகிய இருவரை மட்டும் தனது ட்விட்டரில் பாராட்டினார். ஆனால், அவர் கோலி குறித்து குறிப்பிடாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து வேண்டும் என்றே கங்குலி கோலியின் பெயரை குறிப்பிடவில்லை என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories