விளையாட்டு

தங்க முட்டையிடும் வாத்தை இங்கிலாந்து கொன்று வருகிறது -மேற்கிந்திய தீவுகள் அணி முன்னாள் வீரர் விமர்சனம் !

தங்க முட்டையிடும் வாத்தை கொல்லும் விதமாக இங்கிலாந்து நடந்துகொள்கிறது என மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர் இயன் பிஷப் விமர்சித்துள்ளார்.

தங்க முட்டையிடும் வாத்தை இங்கிலாந்து கொன்று வருகிறது -மேற்கிந்திய தீவுகள் அணி முன்னாள் வீரர் விமர்சனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மேற்கிந்தியத் தீவில் குடியுரிமை கொண்ட ஜோஃப்ரா ஆர்ச்சர் அங்கு உள்ளூர் அணிகளில் விளையாடி வந்தார். ஆனால் அங்கு அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. மேற்கிந்திய தீவுகள் அணி இவரை தொடர்ந்து புறக்கணித்துவந்தது.

மிகச் சிறப்பாக விளையாடியும் மேற்கிந்திய தீவுகள் அணியில் 19 உட்பட்டோருக்கான அணியில் நிரந்தர இடம்கிடைக்காத ஆர்ச்சர் உடனடியாக அங்கிருந்து வெளியேறி இங்கிலாந்து சென்றார். அதன்பின் இங்கிலாந்து குடியுரிமை பெற்று அங்குள்ள கிளப்களில் தொடர்ந்து விளையாடி வந்தார்.

தங்க முட்டையிடும் வாத்தை இங்கிலாந்து கொன்று வருகிறது -மேற்கிந்திய தீவுகள் அணி முன்னாள் வீரர் விமர்சனம் !

ஆனாலும் இங்கிலாந்து விதிப்படி அவர் 7 வருடம் உள்ளூர் அணிகளில் விளையாடினால் மட்டுமே தேசிய அணியில் ஆடமுடியும். இதனால் உள்ளூர் போட்டியில் விளையாடி வந்தவருக்கு ஐபிஎல் மூலம் அதிர்ஷ்டம் அடித்தது . ஐபிஎல் தொடருக்காக கடைசி நேரத்தில் தேர்வான இவரை ராஜஸ்தான் அணி 7.2 கோடி கொடுத்து எடுத்தது.

தொடர்ந்து இரண்டு சீசனாக ஐபிஎல் தொடரில் ஜொலித்ததால் இங்கிலாந்து அணியின் கவனம் அவர்மேல் திரும்பியது. இதனால் 2019 உலகக்கோப்பை தொடருக்கு 15 பேர் கொண்ட இங்கிலாந்து அணியில் முதலில் ஆர்ச்சர் இடம்பெறவில்லை. பிறகு இங்கிலாந்து அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டபோது ஜோஃப்ரா ஆர்ச்சர் சேர்த்துக் கொள்ளப்பட்டார். தொடர்ந்து இங்கிலாந்து அணி உலகக்கோப்பையை வெல்ல ஆர்ச்சர் முக்கிய பங்காற்றினார்.

தங்க முட்டையிடும் வாத்தை இங்கிலாந்து கொன்று வருகிறது -மேற்கிந்திய தீவுகள் அணி முன்னாள் வீரர் விமர்சனம் !

ஆனாலும் தொடர்ந்து காயம் காரணமாக அவதிப்பட்ட ஜோஃப்ரா ஆர்ச்சர் தற்போது நடந்துவரும் ஐபிஎல் தொடரிலும் பங்கேற்று காயமடைந்தார். இதன் காரணமாக வரும் ஆஷஸ் தொடருக்கான அணியில் இருந்தும் ஜோஃப்ரா ஆர்ச்சர் நீக்கப்பட்டார். இந்த நிலையில், தங்க முட்டையிடும் வாத்தை கொல்லும் விதமாக ஜோஃப்ரா ஆர்ச்சர் விவகாரத்தில் இங்கிலாந்து நடந்துகொள்கிறது என மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர் இயன் பிஷப் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர் , "2019ம் ஆண்டு நடந்த ஆஷஸ் தொடரில், இங்கிலாந்து அணி ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு தொடர்ச்சியாக ஓவர்கள் கொடுத்துக்கொண்டே இருந்தனர். அது என்னை அதிர்ச்சி அடைய வைத்தது. தங்க முட்டையிடும் வாத்தை கொல்லும் விதமாக இங்கிலாந்து அணியின் இந்த அணுகுமுறை இருந்தது. குறைந்தபட்சம் ஓராண்டுக்கு ஆர்ச்சர் டெஸ்ட் கிரிக்கெட் பக்கமே போகக்கூடாது" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories