விளையாட்டு

"நடப்பது என்ன என்றே தெரியாதா? வந்து தெரிஞ்சிக்கோங்க" -கங்குலியின் கருத்துக்கு மல்யுத்த வீராங்கனை பதிலடி !

நடப்பது என்ன என்றே தெரியாது என்று கூறிய கங்குலியின் கருத்துக்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் பதிலடி கொடுத்துள்ளார்.

"நடப்பது என்ன என்றே தெரியாதா? வந்து தெரிஞ்சிக்கோங்க" -கங்குலியின் கருத்துக்கு மல்யுத்த வீராங்கனை பதிலடி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருப்பவர் பிரிஜ் பூஷன் சரண் சிங். இவர் பா.ஜ.க சார்பில் எம்.பியாகவும் செயல்பட்டு வருகிறார். இவர் பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் கொடுமைகளைச் செய்வதாகவும், குறைந்தது 10, 12 வீராங்கனைகளுக்கு மேல் இவரால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பெண் மல்யுத்த வீராங்கனைகள் கடந்த ஜனவரி மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதோடு இவரால் தேசிய பயிற்சி முகாம்களில் நியமிக்கப்பட்ட சில பயிற்சியாளர்கள் பல ஆண்டுகளாகப் பெண் மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி வருகின்றனர் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த போராட்டத்தில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்‌ஷி மாலி போன்றவர்கள் கலந்து கொண்டனர்.

"நடப்பது என்ன என்றே தெரியாதா? வந்து தெரிஞ்சிக்கோங்க" -கங்குலியின் கருத்துக்கு மல்யுத்த வீராங்கனை பதிலடி !

இதையடுத்து இந்த போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர ஒன்றிய அரசு, குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. பின்னர் போராட்டத்தை வீராங்கனைகள் தற்காலிகமாக திரும்பப்பெற்றனர்.பின்னர் விசாரணைக் குழு அமைத்தும் 3 மாதங்கள் ஆகியும் பிரிஜ் பூஷன் ஷரண் சிங் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எதுவும் எடுக்காததை அடுத்து மல்யுத்த வீரர்கள் மீண்டும் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையிலும் FIR பதிவு செய்யப்படாத நிலையில், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கூறி மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனைத் தொடர்ந்து பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது கன்னாட் பிளேஸ் காவல் நிலையத்தில் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

"நடப்பது என்ன என்றே தெரியாதா? வந்து தெரிஞ்சிக்கோங்க" -கங்குலியின் கருத்துக்கு மல்யுத்த வீராங்கனை பதிலடி !

மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் இந்திய அணி கேப்டன் சவுரவ் கங்குலி,மல்யுத்த வீரர்களின் போராட்டம் குறித்து எனக்கு தெரியாது. அங்கு என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை, நான் செய்தித்தாள்களில் படித்தேன். அது அவர்கள் யுத்தம் என்பதால், அவர்களே சண்டையிடட்டும்.விளையாட்டு உலகில் முழுமையாகத் தெரியாத விஷயத்தை பற்றிப் பேசக்கூடாது என்பதைக் கற்றுக்கொண்டேன்" என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், கங்குலியின் இந்த கருத்துக்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாகப் பேசிய அவர், ஒரு விளையாட்டு வீரராக மற்றும் அவர்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்ள விரும்பினால் அவர் இங்கு வரட்டும். நீதியை நிலைநாட்ட அவர் எங்களுக்கு ஆதரவளிக்க விரும்பினால், அவர் ஒரு வீரராக ஜந்தர் மந்தருக்கு வந்து எங்களிடமிருந்து எல்லாவற்றையும் புரிந்து கொள்ள முடியும்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories