விளையாட்டு

"நான் அப்போ செஞ்ச தப்ப நீங்க எப்பவும் செய்யாதிங்க" -இளைஞர்களுக்கு அறிவுரை கூறிய அஸ்வின் !

நான் முன்னர் செய்த தவறை தப்ப நீங்களும் செய்யாதீங்க என இளைஞருக்கு அஸ்வின் அறிவுரை கூறியுள்ளார்.

"நான் அப்போ செஞ்ச தப்ப நீங்க எப்பவும் செய்யாதிங்க" -இளைஞர்களுக்கு அறிவுரை கூறிய அஸ்வின் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடர் தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதிய போட்டியில் விராட் கோலி மற்றும் கவுதம் காம்பிர், நவீன் உல் காக் ஆகியோர் ஆக்ரோஷமாக மோதிக்கொண்டனர்.

பெங்களூரு அணி பீல்டிங் செய்துகொண்டிருந்தபோது லக்னோ அணி வீரர் நவீன் உல் காஹ்க்கும் கோலிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது விராட் கோலி தனது ஷூவை தாக்கி அதில் உள்ள தூசுதான் நீ என நவீன் உல் காஹ்க்கை நோக்கி காட்டியதுபோல காட்சி இடம்பெற்றது.

"நான் அப்போ செஞ்ச தப்ப நீங்க எப்பவும் செய்யாதிங்க" -இளைஞர்களுக்கு அறிவுரை கூறிய அஸ்வின் !

பின்னர் இந்த போட்டி முடிந்ததும் வீரர்கள் கைகுலுக்கியபோது லக்னோ வீரர் நவீன் உல் காஹ் மற்றும் விராட் கோலி ஆகியோர் ஆக்ரோஷமாக பேசிக்கொண்டனர். பின்னர் லக்னோ வீரர் கையில் மேயர்ஸ் விராட் கோலியோடு பேசிக்கொண்டிருந்த நிலையில், அவரை காம்பிர் பேசவேண்டாம் என்பதுபோல இழுத்துச்சென்றார்.

இதனால் ஆத்திரம் அடைந்த விராட் கோலி காம்பிரிடம் ஏதோ கூற கோலிக்கும் காம்பிருக்கும் இடையே அங்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே இரு அணி வீரர்களும் இருவரையும் கட்டுப்படுத்தி அங்கிருந்து அழைத்துச்சென்றனர். இந்த சம்பவத்தில் விராட் கோலி ,கவுதம் காம்பிர், நவீன் உல் காக் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

"நான் அப்போ செஞ்ச தப்ப நீங்க எப்பவும் செய்யாதிங்க" -இளைஞர்களுக்கு அறிவுரை கூறிய அஸ்வின் !

இந்த நிலையில், இது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு நான் செஞ்ச தப்ப நீங்களும் செய்யாதீங்க என இளைஞருக்கு அறிவுரை கூறியுள்ளார். ரசிகர்களின் கேள்விக்கு பதில் சொல்லும் நிகழ்ச்சியில் ஒருவர் சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்தில் இருக்கும் வீரர்களின் செயல்பாடுகளும் நடத்தைகளும் அதை பார்க்கும் இளைஞர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறதே? என கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த அஸ்வின், "முன்னர் ஒரு போட்டியில் மேக்ஸ்வெல் என்னுடைய பந்துகளை சரமாரியாக அடித்துக்கொண்டிருந்தார். ஒரு போட்டியில் என்னுடைய 2 ஓவர்களில் 40 ரன்களையெல்லாம் அடித்தார். அப்போது ஒரு போட்டியில் அவரின் விக்கெட்டை வீழ்த்திவிட்டு ஆக்ரோஷமாக வித்தியாசமான முறையில் கொண்டாடினேன். அதற்கு முன் அப்படி செய்தது இல்லை.

"நான் அப்போ செஞ்ச தப்ப நீங்க எப்பவும் செய்யாதிங்க" -இளைஞர்களுக்கு அறிவுரை கூறிய அஸ்வின் !

அந்த நாளுக்கு என்னால் திரும்பிச் செல்ல முடிந்தால் அந்த கொண்டாட்டத்தை தவிர்த்து விடுவேன். என்னைப் பார்த்து ஒரு இளைஞர் நான் ஸ்ட்ரைக்கரை ரன் அவுட் ஆக்கினால் பெரும் மகிழ்ச்சியடைவேன். அதேநேரத்தில் மேக்ஸ்வெல்லுக்கு எதிராக நான் கொண்டாடியதை போல கொண்டாட்டத்தில் யாரும் ஈடுபட்டால் வருந்தவே செய்வேன். நான் ஒரு முறை தவறு செய்துவிட்டேன். நீங்களும் அதே தவறை செய்துவிடாதீர்கள்." எனக் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories