விளையாட்டு

“நாட்டுக்காக ஆடவேண்டாம்; எங்களுக்கு ஆடினால் மட்டும் போதும்”: இங்கிலாந்து வீரர்களோடு IPL அணிகள் ஒப்பந்தம்?

இங்கிலாந்து அணிக்காக ஆடும் 6 வீரர்களிடம் நாட்டுக்காக ஆடுவதை துறந்து முழுக்க முழுக்க லீக் தொடரில் ஆட ஒப்பந்தம் மேற்கொள்ளுமாறு ஐபிஎல் அணிகள் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

“நாட்டுக்காக ஆடவேண்டாம்; எங்களுக்கு ஆடினால் மட்டும் போதும்”: இங்கிலாந்து வீரர்களோடு IPL அணிகள் ஒப்பந்தம்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர்தான். ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பிசிசிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.

ஆரம்பத்தில் லாபம் கிடைக்குமா? என தயங்கி ஐ.பி.எல்.லில் முதலீடு செய்த அணி உரிமையாளர்கள் இப்போது போட்டதை விட பல மடங்கு லாபம் பார்த்துள்ளனர். அதோடு இதில் முதலீடு செய்யும் ஸ்பான்சர்களும் வணிக ரீதியாக லாபம் அடைந்து வருகின்றனர்.

“நாட்டுக்காக ஆடவேண்டாம்; எங்களுக்கு ஆடினால் மட்டும் போதும்”: இங்கிலாந்து வீரர்களோடு IPL அணிகள் ஒப்பந்தம்?

ஐபிஎல் தொடரின் வெற்றியைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை,வங்கதேசம் போன்ற பல்வேறு நாடுகளில் ஐபிஎல் பாணியில் கிரிக்கெட் தொடர்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அங்கும் அவை வணிக ரீதியாக வெற்றியை பெற்றுவருகின்றன. அதோடு தென்னாபிரிக்கா, அமெரிக்கா போன்ற நாடுகளில் நடக்கும் தொடர்களிலும் ஐபிஎல் அணிகள் முதலீடு செய்து அணிகளை வாங்கியுள்ளனர்.

இந்த நிலையில், ஐபிஎல் அணிகள் இங்கிலாந்து அணிக்காக ஆடும் 6 வீரர்களிடம் நாட்டுக்காக ஆடுவதை துறந்து முழுக்க முழுக்க லீக் தொடரில் ஆட ஒப்பந்தம் மேற்கொள்ளுமாறு கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதாவது குறிப்பிட்ட இங்கிலாந்து வீரர்கள் இங்கிலாந்து வாரியம் மற்றும் கவுண்டி அணிகளோடு மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு ஐபிஎல் அணிகளோடு ஒப்பந்தம் மேற்கொண்டால் ஆண்டுக்கு 50 கோடி தருவதாக பேரம் பேசியதாக இங்கிலாந்தின் மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

“நாட்டுக்காக ஆடவேண்டாம்; எங்களுக்கு ஆடினால் மட்டும் போதும்”: இங்கிலாந்து வீரர்களோடு IPL அணிகள் ஒப்பந்தம்?

அப்படி ஐபிஎல் அணிகளோடு ஒப்பந்தம் மேற்கொள்ளும் வீரர்கள் ஆண்டு முழுவதும் நடக்கும் லீக் தொடர்களில் சம்மந்தப்பட்ட அணிகளுக்காக விளையாடுவார்கள் என்றும், அவர்கள் தேசிய அணிக்காக நடைபெறும் போட்டியில் ஆட செல்லமாட்டார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதே போல ஆஸ்திரேலிய வீரர்களிடம் இதுபோல ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories