விளையாட்டு

உலகின் மதிப்புமிக்க வீரரான கைலியன் எம்பாப்பேயை கேப்டனாக அறிவித்தது பிரான்ஸ்.. 24 வயதில் கிடைத்த கெளரவம் !

கைலியன் எம்பாப்பேயை பிரான்ஸ் கால்பந்து கூட்டமைப்பு பிரான்ஸ் அணியின் கேப்டனாக நியமித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

உலகின் மதிப்புமிக்க வீரரான கைலியன் எம்பாப்பேயை கேப்டனாக அறிவித்தது பிரான்ஸ்.. 24 வயதில் கிடைத்த கெளரவம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கத்தாரில் FIFA கால்பந்து உலகக்கோப்பை தொடர் நடைபெற்றது. 32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் நடப்பு சாம்பியன் பிரான்சும், முன்னாள் சாம்பியன் அர்ஜெண்டினாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

உலகக் கோப்பை மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - அர்ஜெண்டினா அணிகள் கத்தாரின் லுசைல் ஐகானிக் மைதானத்தில் மோதின. இந்த ஆட்டத்தில் ஆரம்பத்தில் இருந்து அர்ஜென்டினா அணி அதிரடி ஆட்டம் ஆடியது.

உலகின் மதிப்புமிக்க வீரரான கைலியன் எம்பாப்பேயை கேப்டனாக அறிவித்தது பிரான்ஸ்.. 24 வயதில் கிடைத்த கெளரவம் !

அதன்பலமாக 23வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் மெஸ்ஸி கோல் அடித்து அசத்த, அதனை அடுத்து 36-வது நிமிடத்தில் டி மரியா கோல் அடித்தார். ஆட்டத்தின் முதல் பாதியில் 2-0 என அர்ஜென்டினா அணி முன்னிலையில் இருந்த நிலையில், இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியது.

அர்ஜென்டினாவில் அதிரடிக்கு முன்னர் பிரான்ஸ் அணியால் நிற்கவே முடியவில்லை. ஆனால், அதன்பின்னர் இறுதி சில நிமிடங்களில் அடுத்தடுத்து 2 கோள்களை அடித்து பிரான்ஸ் அணியின் இளம் வீரர் கைலியன் எம்பாப்பே அர்ஜென்டினா அணிக்கு அதிர்ச்சியளித்தார்.

உலகின் மதிப்புமிக்க வீரரான கைலியன் எம்பாப்பேயை கேப்டனாக அறிவித்தது பிரான்ஸ்.. 24 வயதில் கிடைத்த கெளரவம் !

90 நிமிட ஆட்ட நேர முடிவில் இரண்டு அணிகளும் 2-2 கோல் கணக்கில் சம நிலையில் இருந்ததை அடுத்து, போட்டி கூடுதல் நேர ஆட்டத்திற்கு சென்றது. அதில் இரண்டு அணிகளும் தலா ஒரு கோல் அடித்த நிலையில், போட்டி பெனால்டி கிக் முறைக்கு சென்றது. இதில் பிரான்ஸ் அணியை 4-2 என்ற கணக்கில் அர்ஜென்டினா அணி வென்று 36 ஆண்டுகளுக்கு பின்னர் உலகக்கோப்பையை கைப்பற்றியது.

இந்த இறுதி போட்டியில் வென்ற மெஸ்ஸி உலகளவில் கொண்டாடப்பட்டாலும் இறுதிப்போட்டியில் ஹட் ட்ரிக் கோல் அடித்து அதிக கோல் அடித்தவருக்கான தங்க காலணி விருதை வென்ற கைலியன் எம்பாப்பே அதிகம் கவனிக்கப்பட்டார். மெஸ்ஸி -ரொனால்டோவின் காலத்துக்கு பின் அடுத்த உலக சூப்பர் ஸ்டாராக கைலியன் எம்பாப்பே வருவார் என கால்பந்து வல்லுநர்கள் முத்திரை குத்தினர்.

உலகின் மதிப்புமிக்க வீரரான கைலியன் எம்பாப்பேயை கேப்டனாக அறிவித்தது பிரான்ஸ்.. 24 வயதில் கிடைத்த கெளரவம் !

தற்போதைய நிலையில் உலகின் அதிக மதிப்பு மிக்க வீரராக இருக்கும் கைலியன் எம்பாப்பே பிரான்சின் புகழ்பெற்ற பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்காக விளையாடி வருகிறார். இதே அணியில்தான் கால்பந்தில் இதர ஜாம்பவான்களான மெஸ்ஸி மற்றும் நெய்மார் விளையாடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது 24 வயதாகும் கைலியன் எம்பாப்பே ஏற்கனவே 2018-ம் ஆண்டில் உலகக்கோப்பையை வென்ற பிரான்ஸ் அணியில் இடம்பிடித்திருந்தார். இந்த நிலையில், தற்போது கைலியன் எம்பாப்பேயை பிரான்ஸ் கால்பந்து கூட்டமைப்பு பிரான்ஸ் அணியின் கேப்டனாக நியமித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிரான்ஸ் அணியின் கேப்டனாக இருந்த கோல் கீப்பர் லோரிஸ் ஓய்வை அறிவித்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories