விளையாட்டு

அன்று வில்லன்.. இன்று ஹீரோ.. -ஒரே வாரத்தில் மாறிய கே.எல்.ராகுலின் வாழ்க்கை.. கொண்டாடும் ரசிகர்கள் !

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த கே.எல்.ராகுலை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

அன்று வில்லன்.. இன்று ஹீரோ.. -ஒரே வாரத்தில் மாறிய கே.எல்.ராகுலின் வாழ்க்கை.. கொண்டாடும் ரசிகர்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான வீரராக திகழ்பவர் கே.எல்.ராகுல். கர்நாடகத்தை சேர்ந்த இவர் உள்நாட்டு தொடர்களில் தனது சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணியில் இடம்பிடித்து தற்போது இந்திய அணியின் முக்கிய வீரராக திகழ்ந்து வருகிறார். இந்தியாவுக்காக மூன்று விதமான போட்டியிலும் தொடர்ந்து ஆடி வருகிறார்.

கே.எல்.ராகுல் இந்திய அணிக்கு கேப்டனாக பல்வேறு தொடர்களில் அணியை வழிநடத்தியுள்ளார். மேலும், தற்போது அணியின் துணை கேப்டனாகவும் வளம் வருகிறார். ஆனால், சமீப காலமாக அவரின் பார்ம் மிக மோசமாக அமைந்துள்ளது. கில்,இஷான் கிஷன் போன்ற வீரர்கள் வாய்ப்புக்காக காத்து கிடக்க பிசிசிஐ பல்வேறு சந்தர்ப்பங்களில் ராகுலுக்கே அணியில் முக்கியத்துவம் வழங்கியுள்ளது.

அன்று வில்லன்.. இன்று ஹீரோ.. -ஒரே வாரத்தில் மாறிய கே.எல்.ராகுலின் வாழ்க்கை.. கொண்டாடும் ரசிகர்கள் !

தற்போது நடந்துமுடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் கூட தொடக்க வீரராக கே.எல்.ராகுலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் முதல் டெஸ்ட் போட்டியில், 20, ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் 17, 1 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

இதனால் அவரின் துணைகேப்டன் பதவி பறிக்கப்பட்டதோடு அணியில் அவரின் இடமும் பறிக்கப்பட்டு இளம்வீரர் சுப்மன் கில்லுக்கு வழங்கப்பட்டது. தனக்கு கிடைத்த வாய்ப்பில் கில் சதம் அடித்து தனது இடத்தை உறுதிசெய்தார். இதனால் தற்போது டெஸ்ட் போட்டியில் கே.எல்.ராகுலின் இடம் கேள்விக்குள்ளாகியுள்ளது.

அன்று வில்லன்.. இன்று ஹீரோ.. -ஒரே வாரத்தில் மாறிய கே.எல்.ராகுலின் வாழ்க்கை.. கொண்டாடும் ரசிகர்கள் !

அதனைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கே.எல்.ராகுலுக்கு நடுவரிசை வீரராக அணியில் இடம் வழங்கப்பட்டது. இந்த போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

பின்னர் ஆடிய இந்திய அணியில், தொடக்க வீரர்கள் அடுத்தடுத்த ஆட்டமிழந்தனர். ஒரு கட்டத்தில் இந்திய அணி 39 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் பிடியில் சிக்கியது. அப்போது ஜோடி சேர்ந்த கே.எல்.ராகுல் மற்றும் கேப்டன் ஹர்திக் பாண்டியா இணை சரிவில் இருந்து அணியை மீட்டது. அணி 83 ரன்களை எடுத்தபோது இந்த ஜோடி பிரிந்து ஹர்திக் பாண்டியா 25 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அன்று வில்லன்.. இன்று ஹீரோ.. -ஒரே வாரத்தில் மாறிய கே.எல்.ராகுலின் வாழ்க்கை.. கொண்டாடும் ரசிகர்கள் !

பின்னர் ஜோடி சேர்ந்த கே.எல்.ராகுல்- ஜடேஜா இணை இறுதிவரை களத்தில் இருந்து அணியை வெற்றிபெறவைத்தனர். ராகுல் 75 ரன்களோடும் ஜடேஜா 45 ரன்களோடும் களத்தில் இருந்தனர். இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த கே.எல்.ராகுலை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories