விளையாட்டு

ஷமியை நோக்கி 'ஜெய் ஸ்ரீராம்' என முழக்கமிட்ட ரசிகர்கள்- கோலியை முன்வைத்து ரோஹித்தை விமர்சிக்கும் ரசிகர்கள்

மொஹம்மது ஷமி பீல்டிங் செய்துகொண்டிருந்தபோது சில ரசிகர்கள் அவரை பார்த்து ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிட்டது தொடர்பான கேள்விக்கு ரோஹித் சர்மா அளித்த பதில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஷமியை நோக்கி 'ஜெய் ஸ்ரீராம்' என முழக்கமிட்ட ரசிகர்கள்- கோலியை முன்வைத்து ரோஹித்தை விமர்சிக்கும் ரசிகர்கள்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த 2021- ஆண்டு நடைபெற்ற T20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றின் முதல்போட்டியில் பாகிஸ்தானுடன் இந்தியா தோல்வியடைந்தது. இது இந்திய ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது. இதையடுத்து இந்திய வீரர்களை சமூக வலைத்தளங்களில் பலர் திட்டத்தொடங்கினர்.

பாகிஸ்தானுடனான தோல்விக்கு முகமது ஷமி தான் காரணம் எனவே அவர் பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டும் என அவரது மதத்தைக் குறிப்பிட்டு பலரும் அவதூறு கருத்துக்களைப் பரப்பினர்.காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் உள்ளிட்ட பலரும் முகமது ஷமிக்கு ஆதரவாக தங்களது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்தனர்.

ஷமியை நோக்கி 'ஜெய் ஸ்ரீராம்' என முழக்கமிட்ட ரசிகர்கள்- கோலியை முன்வைத்து ரோஹித்தை விமர்சிக்கும் ரசிகர்கள்

இது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு கருத்து தெரிவித்த அப்போதைய கேப்டன் விராட் கோலி "ஒருவர் சார்ந்த மதத்தின் அடிப்படையில் அவரை விமர்சிப்பது ஒரு மனிதன் செய்யக் கூடிய மிகவும் பரிதாபமான செயல். அவர்கள் முதுகெலும்பில்லாதவர்கள். அவர்கள் மீது கவனம் செலுத்தி வாழ்க்கையில் ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்க விரும்பவில்லை" என்று விமர்சித்திருந்தார்.

அதுபோல தற்போது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவதுடெஸ்ட் போட்டியில் மொஹம்மது ஷமி எல்லைக்கோடு அருகேபீல்டிங் செய்துகொண்டிருந்தபோது சில ரசிகர்கள் அவரை பார்த்து ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிட்டனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பின் கேப்டன் ரோஹித் சர்மாவிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது இதற்கு பதிலளித்த "ஷமியை நோக்கி ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிடப்பட்டது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. இப்போதுதான் முதன் முறையாக கேள்விப்படுகிறேன். அங்கே என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது" என்று கூறினார்.

ஷமியை நோக்கி 'ஜெய் ஸ்ரீராம்' என முழக்கமிட்ட ரசிகர்கள்- கோலியை முன்வைத்து ரோஹித்தை விமர்சிக்கும் ரசிகர்கள்

இதனைத் தொடர்ந்து முன்பு விராட் கோலி பேசியதையும், இப்போது ரோஹித் சர்மா பேசியதையும் ஒப்பிட்டு அணியின் வீரருக்கு நடந்த அநீதி குறித்து பேசாத ரோஹித் சர்மாவை விமர்சித்து வருகின்றனர். அதே நேரம் இந்த விவகாரத்தில் தனக்கு தெரியாத விவகாரம் குறித்து தெரியாது என்று கூறிய ரோஹித் சர்மாவின் செயல் ஒன்றும் தவறானது அல்ல என்று அவருக்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories