விளையாட்டு

" IPL தொடருக்கு முன் உலகின் எந்த தொடரும் நிற்க முடியாது" -பாக்.முன்னாள் வீரர் ஒப்புதல் !

ஐபிஎல் தொடரால் இந்திய வீரர்கள் வெளிநாடுகளுக்கு சென்று விளையாட வேண்டிய அவசியம் இருக்கவில்லை என பாகிஸ்தான் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் தெரிவித்துள்ளார்.

" IPL தொடருக்கு முன் உலகின் எந்த தொடரும் நிற்க முடியாது" -பாக்.முன்னாள் வீரர் ஒப்புதல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல் தொடர்தான். ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பிசிசிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.

ஆரம்பத்தில் லாபம் கிடைக்குமா? என தயங்கி ஐபிஎல்லில் முதலீடு செய்த அணி உரிமையாளர்கள் இப்போது போட்டதை விட பல மடங்கு லாபம் பார்த்துள்ளனர். அதோடு இதில் முதலீடு செய்யும் ஸ்பான்சர்களும் வணிக ரீதியாக லாபம் அடைந்து வருகின்றனர்.

" IPL தொடருக்கு முன் உலகின் எந்த தொடரும் நிற்க முடியாது" -பாக்.முன்னாள் வீரர் ஒப்புதல் !

ஐபிஎல் தொடரின் வெற்றியைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை,வங்கதேசம் போன்ற பல்வேறு நாடுகளில் ஐபிஎல் பாணியில் கிரிக்கெட் தொடர்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அங்கும் அவை வணிக ரீதியாக வெற்றியை பெற்றுவருகின்றன.

இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடரில் பல்வேறு நாடுகளின் வீரர்களும் பங்கேற்றுவரும் நிலையில், இந்திய வீரர்களை பிற நாட்டு லீக் தொடர்களின் ஆட பிசிசிஐ தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், ஐபிஎல் தொடரால் இந்திய வீரர்கள் பொருளாதார அளவில் வலுவானவர்களாக இருப்பதால் அவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று விளையாட வேண்டிய அவசியம் இருக்கவில்லை என பாகிஸ்தான் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் தெரிவித்துள்ளார்.

" IPL தொடருக்கு முன் உலகின் எந்த தொடரும் நிற்க முடியாது" -பாக்.முன்னாள் வீரர் ஒப்புதல் !

இது தொடர்பாக பேசிய அவர், "வெளிநாட்டு டி20 தொடர்களில் இந்தியா வீரர்களை விளையாட விடாமல் இந்திய கிரிக்கெட் வாரியம் வாரியம் சரியான வேலைகளை செய்து வருகிறது. அவர்களுக்கு இரண்டரை மாதம் ஐபிஎல் மற்றும் இந்திய நாட்களில் சர்வதேச போட்டிகள் இருக்கிறது என்பது அனைவர்க்கும் தெரியும். அத்துடன் ஐபிஎல் தொடரால் இந்திய வீரர்கள் பொருளாதார அளவில் வலுவானவர்களாக இருக்கின்றனர். அதனால் அவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று விளையாட வேண்டிய அவசியமில்லை. மொத்தத்தில் ஐபிஎல் வீரர்களுக்கு அதிக பணம் கொடுக்கிறது. அதற்கு முன்பாக பிக்பேஷ் தொடர் மட்டுமல்லாது உலகில் எந்த டி20 தொடரும் நிற்க முடியாது" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories