விளையாட்டு

"என்ன செய்வதென்றே தெரியவில்லை, அணி வீரர்களை பார்த்து நான் வருத்தப்படுகிறேன்" -ஆஸ். ஜாம்பவான் விரக்தி !

ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான் வீரர் ஆலன் பார்டர், ஆஸ்திரேலிய அணி வீரர்களை பார்த்து நான் மிகவும் வருத்தப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.

"என்ன செய்வதென்றே தெரியவில்லை, அணி வீரர்களை பார்த்து நான் வருத்தப்படுகிறேன்" -ஆஸ். ஜாம்பவான் விரக்தி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இதில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. அதைத் தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணி ஒரு கட்டத்தில் 91-1 என்ற நல்ல நிலையில் இருந்தது.

ஆனால், ஒரே ஓவரில் இந்திய வீரர் அஸ்வின் உலகின் நம்பர் 1 வீரர் லபுசேனையும் உலகின் நம்பர் 2 வீரர் ஸ்மித்தையும் அடுத்தடுத்து வீழ்த்தி ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். எனினும் ஆஸ்திரேலிய அணியில் கவாஜா மற்றும் ஹன்ட்ஸ்காப் ஆகியோர் சிறப்பாக ஆடியதால் அந்த அணி 263 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய தரப்பில் சமி 4 விக்கெட்டுகளையும், அஸ்வின், ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

"என்ன செய்வதென்றே தெரியவில்லை, அணி வீரர்களை பார்த்து நான் வருத்தப்படுகிறேன்" -ஆஸ். ஜாம்பவான் விரக்தி !

பின்னர் ஆடிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 137-7 என்ற பரிதாப நிலையில் இந்திய அணி இருந்தது. ஆனால், பின்னர் ஜோடி சேர்ந்த அக்சர் படேல் -அஸ்வின் இணை 114 ரன்கள் குவித்து இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டது. இறுதியில் இந்திய அணி 262 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.பின்னர் இரண்டாம் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி வெறும் 114 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.ஜடேஜா 7 விக்கெட்டுகளும், அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.இந்த போட்டியில் ஜடேஜாவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்த தோல்வியைத் தொடர்ந்து பல்வேறு முன்னாள் வீரர்களும் ஆஸ்திரேலிய வீரர்களின் ஆட்டதற்கு கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில் ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான் வீரர் ஆலன் பார்டர், ஆஸ்திரேலிய அணி வீரர்களை பார்த்து நான் மிகவும் வருத்தப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.

"என்ன செய்வதென்றே தெரியவில்லை, அணி வீரர்களை பார்த்து நான் வருத்தப்படுகிறேன்" -ஆஸ். ஜாம்பவான் விரக்தி !

இது தொடர்பாக பேசிய அவர், "ஆஸ்திரேலிய வீரர்கள் இரண்டு நாட்களுக்கு ரேடியோக்கள், செய்தித்தாள்களை எல்லாம் மூடி வைத்து விட்டு அனைவரும் ஒன்றாக அமர்ந்து தரம் வாய்ந்த சுழற் பந்துவீச்சை எப்படி எதிர்கொள்வது என்று பேசி ஒரு முடிவுக்கு வாருங்கள். ஸ்வீப் ஷாட்களை ஆடி ரன்கள் எடுப்பது சரியான முறை கிடையாது.

முதல் 15 20 ரன்கள் எடுக்கும் போது தான் உங்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும். அதன் பிறகு ஆடுகளத்தின் தன்மை, களத்தின் சூழல் புரிந்து விடும். பிறகு ரன்கள் அடிப்பது எளிதாகிவிடும். ஆஸ்திரேலிய வீரர்களை பார்த்து நான் மிகவும் வருத்தப்படுகிறேன். இது கடினமான வேலை. இப்போது நீங்கள் கற்றுக் கொள்கிறீர்கள். இதுபோன்ற பந்துவீச்சை எதிர்கொள்வது சுலபம் கிடையாது. இதற்கு நீங்கள் எப்படி விடை கண்டுபிடிக்கப் போகிறீர்கள் என்று எனக்கும் தெரியவில்லை" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories