விளையாட்டு

" இவர்களை கண்டால் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்" -ரசிகர்களுக்கு ராகுல் டிராவிட் வேண்டுகோள் !

ஷாயீன் அஃப்ரிடி, மிட்சல் ஸ்டார்க் போல, 6.4 அடி உயரமுள்ள இடது கை வேகப்பந்து வீச்சாளர்களை கண்டால் எனக்கு தெரியப்படுத்துங்கள் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.

" இவர்களை கண்டால் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்" -ரசிகர்களுக்கு ராகுல் டிராவிட் வேண்டுகோள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த மாதம் நியூஸிலாந்து அணிக்கு எதிரான நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் முதலில் ஆடிய நியூஸிலாந்து அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய இந்திய அணி தொடக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

பின்னர் சூரியகுமார் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஆகியோர் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த வீரர்களில் வாஷிங்டன் சுந்தர் மட்டுமே இறுதிவரை போராடி அரைசதம் அடித்து கடைசி ஒவரில் ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 155 ரன்கள் மட்டுமே குடித்து தோல்வியைத் தழுவியது.

" இவர்களை கண்டால் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்" -ரசிகர்களுக்கு ராகுல் டிராவிட் வேண்டுகோள் !

இந்த போட்டியில் இந்திய பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் இறுதி ஒவரில் 27 ரன்கள் விட்டுக்கொடுத்து இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக கருதப்பட்டது. மேலும், இறுதிஓவரில் அவர் நோ பால் வீசியதும் அந்த ஒரே பந்தில் 13 ரன்கள் விலாசப்பட்டதும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதே போல இதற்கு முன்னர் இலங்கைக்கு எதிரான போட்டியில் ஒரே ஒவரில் 3 நோ பால் மற்றும் அந்த போட்டியில் 4 நோ பால் வீசியதற்கு அர்ஷ்தீப் சிங் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

அர்ஷ்தீப் சிங் இந்திய அணியில் இடம்பெட்டபோது அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. முன்னாள் வீரர்கள் ஜாஹிர் கானுக்கு பிறகு இந்திய அணிக்கு சிறந்த இடதுகை வேகப்பந்துவீச்சாளர் கிடைத்துவிட்டார் என்ற ரீதியில் புகழ்ந்து தள்ளினர். அதற்கு ஏற்றாபோல அர்ஷ்தீப் சிங்கும் ஆசியக்கோப்பை, டி20 உலகக்கோப்பை ஆகிய தொடர்களில் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால், அதன்பின்னர் அவர் வீசிய நோபால், இறுதிகட்டத்தில் திடீரென அதிக ரன்கொடுப்பது போன்ற சீரற்ற நிலையில் இருக்கிறார்.

" இவர்களை கண்டால் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்" -ரசிகர்களுக்கு ராகுல் டிராவிட் வேண்டுகோள் !

இந்த நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஷாயீன் அஃப்ரிடி, மிட்சல் ஸ்டார்க் போல இந்திய அணியில் இடதுகை பவுலர்கள் இல்லையே என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் "இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் அணிக்கு கிடைப்பது அரிது. ஜாகீர் கானின் ஓய்வுக்குப் பிறகு, யாரும் அந்த இடத்தை நிரப்பவில்லை; அர்ஷ்தீப் சிங் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் என்றாலும், அவர் முழுத்திறனை இன்னும் வெளிப்படுத்தவில்லை; ஷாயீன் அஃப்ரிடி, மிட்சல் ஸ்டார்க் போல, 6.4 அடி உயரமுள்ள இடது கை வேகப்பந்து வீச்சாளர்களை கண்டால் எனக்கு தெரியப்படுத்துங்கள்!" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories