விளையாட்டு

"கங்குலிக்கு கோலியை பிடிக்காது.. ஊக்க மருந்து பயன்படுத்தும் இந்திய வீரர்கள்"-தேர்வுக்குழு தலைவர் கருத்து!

தனியார் தொலைக்காட்சியின் ஸ்டிங் ஆபரேஷனில் சிக்கிய இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா வெளியிட்ட தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"கங்குலிக்கு கோலியை பிடிக்காது.. ஊக்க மருந்து பயன்படுத்தும் இந்திய வீரர்கள்"-தேர்வுக்குழு தலைவர் கருத்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் டி-20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தது. அந்தத் தொடருக்கு முன்பு திடீரென டி-20 அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அந்த உலகக் கோப்பையே இந்திய டி-20 அணிக்கு தான் தலைமை வகிக்கும் கடைசித் தொடர் என்று கூறினார். ஒருநாள் மட்டும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தக் காத்திருப்பதாகவும் கூறியிருந்தார்.

அவர் தலைமையிலான அணி தொடர்ந்து ஐ.சி.சி தொடர்களை வெற்றி பெறத் தவறியதால் அவர் மீது தொடர்ந்து விமர்சனம் எழுந்துகொண்டே இருந்தது. அதனால், இந்த முடிவை எடுத்திருப்பார் என்று கருதப்பட்டது. அந்த முடிவை அறிவித்த சில நாள்களிலேயே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஐ.பி.எல் அணியின் கேப்டன் பதவியிலிருந்தும் அந்த சீசனோடு விலகுவதாகக் கூறினார்.

"கங்குலிக்கு கோலியை பிடிக்காது.. ஊக்க மருந்து பயன்படுத்தும் இந்திய வீரர்கள்"-தேர்வுக்குழு தலைவர் கருத்து!

கோலி பதவி விலகியதும் இந்திய டி-20 அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா நியமிக்கப்பட்டார். இதனையடுத்து இந்திய ஒருநாள் அணிக்கும் ரோஹித்தை கேப்டனாக அறிவிக்கவேண்டும் என்ற வாதம் எழுந்தது. இருந்தாலும், ஒருநாள் அணிக்கு கேப்டனாகத் தொடர கோலி விருப்பம் தெரிவித்திருந்ததால் எந்த மாற்றமும் நிகழாது என்று கருதப்பட்டது. ஆனால், தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை அறிவிக்கும்போது, ரோஹித்தை டி-20 மற்றும் ஒருநாள் அணிக்கான கேப்டனாக அதிகாரபூர்வமாக அறிவித்தது பிசிசிஐ.

இந்த நிலையில், பிசிசிஐ தலைவராக இருந்த கங்குலிக்கு விராட் கோலியை பிடிக்கவில்லை என்றும் இதுவே கோலியின் கேப்டன்ஸி பறிப்புற்கு காரணமாக இருந்துள்ளது என்றும் இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா கூறியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சியின் ஸ்டிங் ஆபரேஷனில் சிக்கிய சேத்தன் சர்மா வெளியிட்ட தகவல்கள் மூலம் இது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பேசிய அவர், "பிசிசிஐ தலைவராக இருந்த கங்குலி விராட் கோலியை இந்திய கேப்டன் பதவியில் இருந்து நீக்க விரும்பவில்லை. ஆனால்,கோலியின் ஈகோவின் காரணமாகவே இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டது. தன்னை கேப்டன் பதவியில் இருந்து கங்குலிதான் நீக்கியதாக கோலி கருதி கங்குலி தன்னுடைய கேப்டன் பதவியை பறித்ததாக கோலி குற்றம்சாட்டினார்.

"கங்குலிக்கு கோலியை பிடிக்காது.. ஊக்க மருந்து பயன்படுத்தும் இந்திய வீரர்கள்"-தேர்வுக்குழு தலைவர் கருத்து!

ஆனால், கங்குலி குறித்து விராட் கோலி தெரிவித்த குற்றச்சாட்டுகள் தவறானவை. அதே நேரம் சவுரவ் கங்குலிக்கும் விராட் கோலியை பிடிக்காது. கேப்டன் பதவி தொடர்பாக இந்திய அணிக்கு உள்ளேயே நிறைய பிரச்சனைகள் ஓடிக்கொண்டு இருந்தன. ஆனால் கங்குலி ரோகித் சர்மாவுக்கு ஆதரவாக செயல்படவில்லை" என்று கூறியுள்ளார்.

மேலும், "80% உடற்தகுதி கூட இல்லாத இந்திய நட்சத்திர வீரர்கள் சிலர், காயத்தை மறைக்க போட்டிக்கு முன்னர் உடற்தகுதி பெறுவதற்கு ஊசி போட்டுக்கொண்டு விளையாடுவார்கள். இதை ஊக்க மருந்து சோதனையில் கண்டுபிடிக்க முடியாது" என்று அவர் கூறியுள்ளது விளையாட்டு உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories