விளையாட்டு

"இந்த செயல் கொடூரமானது".. இந்திய கிரிக்கெட் வாரியத்தை கடுமையாக தாக்கிய ஆஸ்திரேலிய அணி முன்னாள் வீரர்!

பயிற்சிக்குக் கேட்ட பிறகும் நாக்பூர் மைதானத்தில் தண்ணீர் ஊற்றி மைதானத்தை மாற்றி அமைத்ததற்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் இயன் ஹீலி கடுமையாக கடுமையாக விமர்சித்துள்ளார்.

"இந்த செயல் கொடூரமானது".. இந்திய கிரிக்கெட் வாரியத்தை கடுமையாக தாக்கிய ஆஸ்திரேலிய அணி முன்னாள் வீரர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடர் இந்தியாவில் தொடங்கியுள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட போட்டி போட்டி நாக்பூரில் நடைபெற்றது.

இந்த தொடரில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஆஸ்திரேலிய வீரர்கள் கடுமையாகப் பயிற்சியில் ஈடுபட்டனர். குறிப்பாக இந்திய வீரர் ரவிசந்திர அஸ்வின் போன்று பந்து வீசும் வீரரை வைத்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இந்தத் தொடர் இரு அணிகளுக்கும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போட்டியில் ஆஸ்திரேலியா அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

"இந்த செயல் கொடூரமானது".. இந்திய கிரிக்கெட் வாரியத்தை கடுமையாக தாக்கிய ஆஸ்திரேலிய அணி முன்னாள் வீரர்!

இந்த போட்டியில் 7 விக்கெட் மற்றும் 70 ரன்கள் குவித்த ஜடேஜா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். அடுத்ததாக இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் வரும் 17-ம் தேதி தொடங்கவுள்ளது.

இந்த தோல்வியை அடுத்து ஆஸ்திரேலிய வீரர்கள் நாக்பூர் மைதனாத்தில் 2 நாட்களுக்கு பயிற்சிக்குக் கொடுக்க விதர்பா மைதான நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர். அடுத்த நடக்கும் அனைத்து போட்டியின் மைதானங்களும் நாக்பூர் மைதானம் போன்றே இருக்கும் என்பதால் அங்கு பயிற்சி எடுக்க ஆந்திரேலிய அணி நிர்வாகம் முடிவு எடுத்தது.

ஆனால், நாக்பூர் மைதானத்தைத் தண்ணீர் விட்டு ஊற்றி மாற்றி அமைக்கப்பட்டது ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"இந்த செயல் கொடூரமானது".. இந்திய கிரிக்கெட் வாரியத்தை கடுமையாக தாக்கிய ஆஸ்திரேலிய அணி முன்னாள் வீரர்!

பொதுவாக ஒரு போட்டி முடிந்தவுடன் மைதானத்தில் தண்ணீர் ஊற்றி மாற்றி அமைப்பது வழக்கம். ஆனால் ஆஸ்திரேலிய வீரர்கள் பயிற்சி மைதானத்தைக் கேட்ட பிறகு இப்படி நடந்து கொண்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் மீது ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் இயன் ஹீலி கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்துக் கூறிய இயன் ஹீலி, "நாக்பூர் மைதானம் பயிற்சிக்காக தேவை என ஆஸ்திரிலியா கோரிக்கை வைத்த பிறகும் இப்படிச் செய்தது சங்கடத்தை அளிக்கிறது. இந்தச் செயல் கொடூரமானது. இதுகிரிக்கெட்டுக்கு நல்லதல்ல" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories