விளையாட்டு

"அஸ்வினை விடுங்க, உண்மையான ஆபத்தே இவர்தான்" -ஆஸ்திரேலிய அணிக்கு எச்சரிக்கை விடுத்த சேன் வாட்சன் !

அஸ்வின் பந்துவீச்சை விட அக்சர் பட்டேலின் பந்துவீச்சை எதிர்கொள்வது ஆஸ்திரேலிய வீரர்களுக்கு கடினமாக இருக்கும் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் சேன் வாட்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

"அஸ்வினை  விடுங்க, உண்மையான ஆபத்தே இவர்தான்" -ஆஸ்திரேலிய அணிக்கு எச்சரிக்கை விடுத்த சேன் வாட்சன் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி வரும் பிப்ரவரி 9ஆம் தேதி நாக்பூரில் தொடங்குகிறது. புகழ்பெற்ற பழமைவாய்ந்த ஆஷஸ் தொடருக்கு பின்னர் முக்கியத்துவம் வாய்ந்த டெஸ்ட் தொடராக இருப்பதால் இது கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று கோப்பையை தக்கவைத்துக்கொண்டது. மேலும், கடைசியாக நடந்த 3 தொடர்களிலும் இந்த கோப்பையை இந்திய அணியே வென்றுள்ளது. இதன் காரணமாக இந்த முறை இந்த தொடரை வென்று இந்திய அணிக்கு பதிலடி கொடுக்க ஆஸ்திரேலிய அணி தீவிரம் காட்டி வருகிறது.

"அஸ்வினை  விடுங்க, உண்மையான ஆபத்தே இவர்தான்" -ஆஸ்திரேலிய அணிக்கு எச்சரிக்கை விடுத்த சேன் வாட்சன் !

இதற்காக சுழலுக்கு ஏற்ற இந்திய மைதானங்களை போலவே சிட்னியில் மைதானத்தை தயாரித்து ஆஸ்திரேலியா அணி பயிற்சியில் ஈடுபட்டது. இந்தியாவுக்கு வந்த பின்னரும் சுழல் பந்துவீச்சுக்கு தயாராகும் வகையில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணியின் முழு பயமும் இந்திய அணியின் சுழல்பந்துவீச்சாளர் அஸ்வினின் மீதே இருக்கிறது என்பது அந்த அணியின் பேச்சின் மூலம் தெரியவந்துள்ளது. இந்திய மைதானத்தில் அஸ்வின் அபாயகரமான வீரர் என்பதால் அவரை சமாளிக்க அவரை போலவே பந்துவீசும் பரோடா ரஞ்சி அணிக்கு ஆடும் 21 வயது நிரம்பிய மகேஷ் பிதியா என்ற இளம் ஆஃப் ஸ்பின்னரை வரவழைத்து பந்துவீச்சு பயிற்சி எடுத்து வருகிறது. மேலும் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் முதல் வீரர்கள் வரை மூச்சிக்கு முன்னூறு முறை அஸ்வின் அஸ்வின் என்றே புலம்பி வருகின்றனர்.

"அஸ்வினை  விடுங்க, உண்மையான ஆபத்தே இவர்தான்" -ஆஸ்திரேலிய அணிக்கு எச்சரிக்கை விடுத்த சேன் வாட்சன் !

ஆனால், இந்திய அணியில் அஸ்வினை தாண்டி ஜடேஜா,அக்சர் படேல் போன்ற சுழற்பந்து வீச்சாளர்களும் இந்திய மைதானத்தில் வெகுசிறப்பாக பந்துவீசி வருகின்றனர். அதிலும் அக்சர் படேல் சமீபத்தில் எதிரணிகளுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்து வருகிறார். அவரின் எந்த பந்து திரும்பும், எந்த பந்து நேராக வரும் என்பதை அறியாமல் பேட்ஸ்மேன்கள் தங்கள் விக்கெட்டுகளை இழந்து வருகின்றனர்.

இந்த நிலையில், அஸ்வின் பந்துவீச்சை விட அக்சர் பட்டேலின் பந்துவீச்சை எதிர்கொள்வது ஆஸ்திரேலிய வீரர்களுக்கு கடினமாக இருக்கும் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் சேன் வாட்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், " ஆஸ்திரேலிய அணியின் பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் அக்சர் பட்டேலின் பந்துவீச்சை இதற்கு முன் எதிர்கொண்டது இல்லை. இதனால் அக்சர் பட்டேலின் பங்களிப் இந்த தொடரில் முக்கியமாக இருக்கும்.

"அஸ்வினை  விடுங்க, உண்மையான ஆபத்தே இவர்தான்" -ஆஸ்திரேலிய அணிக்கு எச்சரிக்கை விடுத்த சேன் வாட்சன் !

நான் டெஸ்ட் போட்டியில் அக்சர் பட்டேலின் பந்துவீச்சை எதிர்கொண்டது இல்லை. ஆனால் டி20 போட்டியிலேயே அவரது பந்துவீச்சை எதிர்கொள்வது கடினமானதாக இருந்தது. அஸ்வின் மற்றும் ஜடேஜாவின் பந்துவீச்சில் இருந்து அக்சர் பட்டேலின் பந்துவீச்சு முற்றிலும் மாறுபட்டது. இதனால் ஆஸ்திரேலிய வீரர்கள் அக்சர் பட்டேலின் பந்துவீச்சை கூடுதல் கவனத்துடன் எதிர்கொள்ள வேண்டும்" என்று கூறினார்.

banner

Related Stories

Related Stories