விளையாட்டு

”பேபி பெளலரான பும்ராவால் இந்த பாக். வீரர் அருகில் கூட வரமுடியாது” பாக். முன்னாள் வீரர் சர்ச்சைக் கருத்து!

ஜஸ்ப்ரித் பும்ராவை விட ஷஹீன் அப்ரிடி பல மடங்கு சிறந்த வீரர். ஷஹீனின் திறமைக்கு பும்ரா கொஞ்சம் கூட பக்கத்தில் வர முடியாது என பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்துல் ரசாக் கூறியுள்ளார்.

”பேபி பெளலரான பும்ராவால் இந்த பாக். வீரர் அருகில் கூட வரமுடியாது” பாக். முன்னாள் வீரர் சர்ச்சைக் கருத்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இன்றைய கிரிக்கெட் உலகின் மிகச் சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களான ஷஹீன் அப்ரிடி, ஜஸ்ப்ரித் பும்ரா இருவரும் காயத்திலிருந்து மீண்டு வந்து மீண்டும் கலக்கக் காத்திருக்கிறார்கள். முழங்கால் காயத்தால் அவதிப்படும் அப்ரிடியும், முதுகுப் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருக்கும் பும்ராவும் கடந்த சில மாதங்களாகவே எந்த வித போட்டிகளிலும் பங்கேற்காமல் இருந்துவருகிறார்கள். அவர்கள் இருவரும் மீண்டும் முழு ஃபிட்னஸோடு வரவேண்டும் என்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

அப்ரிடியின் முழங்கால் பிரச்னையால் அவரால் 2022 ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்க முடியவில்லை. அந்தத் தொடரில் இரண்டாவது இடம் பிடித்தது பாகிஸ்ஆன் அணி. இருந்தாலும், ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பையில் மீண்டும் அணிக்குக் கம்பேக் கொடுத்தார் அப்ரிடி. அந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்திடம் தோற்று இரண்டாவது இடம் பிடித்தது பாகிஸ்தான். இந்தத் தொடரின்போது மீண்டும் ஒருமுறை காயம் அடைந்தார் அவர். இறுதிப் போட்டியில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்தபோது அவர் காயம் அடைய, மொத்த சீசனையும் தவறவிடவேண்டியதாக இருந்தது.

”பேபி பெளலரான பும்ராவால் இந்த பாக். வீரர் அருகில் கூட வரமுடியாது” பாக். முன்னாள் வீரர் சர்ச்சைக் கருத்து!

அதேசமயம், பும்ராவின் முதுகுப் பிரச்னையால் அவரால் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்க முடியவில்லை. அவர் இல்லாத இந்திய அணி, இறுதிப் போட்டிக்கு முன்னேறக் கூட தவறியது. டி20 உலகக் கோப்பை வந்ததால், அவரை விரைந்து அணிக்குள் அழைத்து வந்தது இந்திய அணி நிர்வாகம். ஆனால், அது அவர்களுக்குப் பிரச்னையாக அமைந்தது. டி20 உலகக் கோப்பையில் பும்ரா விளையாட முடியாது நிலை ஏற்பட, பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடெமியில் தங்கி அவர் காயத்திலிருந்து மீண்டு வர அறிவுறுத்தப்பட்டது.

”பேபி பெளலரான பும்ராவால் இந்த பாக். வீரர் அருகில் கூட வரமுடியாது” பாக். முன்னாள் வீரர் சர்ச்சைக் கருத்து!

இந்த இரு வேகப்பந்துவீச்சாளர்களையும் ஒப்பிட்டுப் பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் அப்துல் ரசாக், பும்ராவை மட்டம் தட்டிப் பேசியிருக்கிறார். பாகிஸ்தான் அணியின் தேர்வுக் குழு உறுப்பினராக இருக்கும் அப்துல் ரசாக் சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். அதில், "ஜஸ்ப்ரித் பும்ராவை விட ஷஹீன் அப்ரிடி பல மடங்கு சிறந்த வீரர். ஷஹீனின் திறமைக்கு பும்ரா கொஞ்சம் கூட பக்கத்தில் வர முடியாது" என்று ஒரு நிகழ்ச்சியின்போது தொலைக்காட்சி ஒன்றுக்கு சொல்லியிருக்கிறார்.

”பேபி பெளலரான பும்ராவால் இந்த பாக். வீரர் அருகில் கூட வரமுடியாது” பாக். முன்னாள் வீரர் சர்ச்சைக் கருத்து!

பும்ராவைப் பற்றி அப்துல் ரசாக் மட்டமாகப் பேசுவது இது முதல் முறை அல்ல. 2019ம் ஆண்டு பும்ராவை 'பேபி பௌலர்' என்று குறிப்பிட்டிருந்தார் ரசாக். அதுமட்டுமல்லாமல், ஒருவேளை தான் இன்னும் விளையாடிக்கொண்டிருந்தால் பும்ராவை அசால்டாக பதம் பார்த்திருப்பேன் என்றும் கூறியிருந்தார். "கிளென் மெக்ராத், வாசிம் அக்ரம் போன்ற மிகச் சிறந்த பௌலர்களுக்கு எதிராகவெல்லாம் நான் விளையாடியிருக்கிறேன். அதனால் எனக்கு முன்பு பும்ரா ஒரு பேபி பௌலர். அவரை மிகவும் எளிதாக என்னால் ஆதிக்கம் செலுத்தியிருக்க முடியும். எளிதாக அவரை என்னால் அட்டாக் செய்திருக்க முடியும்" என்று அப்போது கூறியிருந்தார் ரசாக்.

banner

Related Stories

Related Stories