விளையாட்டு

“யாருமே அவருக்கு அருகில் வர முடியாது..” : சச்சின் - தோனியோடு விராட் கோலியை ஒப்பிட்டு பேசிய மஞ்ச்ரேக்கர் !

இன்றைய காலகட்டத்தில் விவியன் ரிச்சர்ட்ஸ் இணையான செயல்பாட்டைக் கொடுத்துக்கொண்டிருக்கிறார் விராட் கோலி என இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் பாராட்டியுள்ளார்.

“யாருமே அவருக்கு அருகில் வர முடியாது..” : சச்சின் - தோனியோடு விராட் கோலியை ஒப்பிட்டு பேசிய மஞ்ச்ரேக்கர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கடந்த ஆண்டு நடந்த ஆசிய கோப்பை தொடருக்குப் பிறகு மிகச் சிறப்பாக விளையாடிக்கொண்டிருக்கிறார் விராட் கோலி. இதுவரை சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 46 சதங்கள் அடித்திருக்கும் விராட் கோலி, ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை விட 3 சதங்கள் தான் குறைவாக எடுத்திருக்கிறார்.

ஆசிய கோப்பையில் சதமடித்து தன்னுடைய ஃபார்மை மீட்டெடுத்த விராட், இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அடுத்தடுத்து 2 சதங்கள் அடித்து அசத்தினார். இன்னும் 3 சதங்கள் அடித்தார், சச்சின் டெண்டுல்கரின் ஆல் டைம் ரெக்கார்டான 49 சதங்களை சமன் செய்துவிடுவார் விராட் கோலி.

“யாருமே அவருக்கு அருகில் வர முடியாது..” : சச்சின் - தோனியோடு விராட் கோலியை ஒப்பிட்டு பேசிய மஞ்ச்ரேக்கர் !

இந்த வருடம் உலகக் கோப்பை தொடர் நடக்கவிருக்கும் நிலையில், இந்த 34 வயது நட்சத்திர வீரர் மீது அனைவரின் கவனமும் இருக்கப்போகிறது. ஏற்கெனவே 2011 உலகக் கோப்பையை வென்றிருக்கும் விராட் கோலி இதுவரை ஒருநாள் போட்டிகளில் 12,773 ரன்கள் குவித்திருக்கிறார். அவருடைய சராசரி 57.79!

விராட் கோலி பற்றி பேசிய இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர், விராட் கோலியை மிகச் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் என்று குறிப்பிட்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் சச்சின் டெண்டுல்கர் மற்றும் எம்.எஸ்.தோனி ஆகியோரோடு கோலியை ஒப்பிட்டிருக்கிறார் மஞ்ச்ரேக்கர்.

"ஒருநாள் கிரிக்கெட்டின் சமீபத்திய காலகட்டத்தில்... அதாவது கடந்த சுமார் 20 ஆண்டுகளைப் பார்த்தால், விராட் கோலி மிகச் சிறந்த வீரர்களுள் ஒருவராக திகழ்ந்திருக்கிறார். டெண்டுல்கரும் கிரிக்கெட்டின் மிகச் சிறந்த வீரர்களுள் ஒருவர். விராட் கோலியோ, என்னைப் பொறுத்தவரை பக்காவான ஒருநாள் பிளேயர். அதுபோன்ற இன்னொரு வீரர் தான் எம்.எஸ்.தோனி" என்று கூறினார் மஞ்ச்ரேக்கர்.

“யாருமே அவருக்கு அருகில் வர முடியாது..” : சச்சின் - தோனியோடு விராட் கோலியை ஒப்பிட்டு பேசிய மஞ்ச்ரேக்கர் !

"ஆனால் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மிகச் சிறந்த வீரர் என்றால், அது சர் விவியன் ரிச்சர்ட்ஸ் தான். யாருமே அவருக்கு அருகில் கூட வர முடியாது. இது கொஞ்சம் பழமையானதாக இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை.

எழுபதுகள் முதல் தொன்னூறுகள் வரை அவர் ஆடிய காலகட்டத்தில் விளையாடிய மற்ற வீரர்கள் 30 என்ற சராசரியோடும், 60 என்ற ஸ்டிரைக் ரேட்டோடும் ஆடியிருந்தார்கள். ஆனால், அதே காலகட்டத்தில் ஆடிய ரிச்சர்ட்ஸ், 47 என்ற சராசரியோடு 90 ஸ்டிரைக் ரேட்டில் ஆடினார். அவருக்கு நிகராக அந்தக் காலகட்டத்தில் எவருமே விளையாடவில்லை.

"அதுதான் ஆல் டைம் கிரேட் வீரர்களை ஒப்பிடுவதற்கான சரியான வழி. இன்றைய காலகட்டத்தில், விராட் கோலி அதற்கு நிகராக இருக்கிறார்" என்றும் கூறினார் அவர். அதேசமயம், முன்னாள் இன்னால் வீரர்களை ஒப்பிட்டு, யார் சிறந்தவர் என்ற முடிவுக்கு வருவது எளிதானதல்ல என்றும் கூறியிருக்கிறார் அவர்.

விராட் கோஹ்லி
விராட் கோஹ்லி

"ஒரு நாள் வீரர்களில், விவியன் ரிச்சர்ட்ஸின் நம்பர்களை எடுத்து அன்று அவர் காலகட்டத்தில் விளையாடிய வீரர்களோடும் ஒப்பிட்டு பார்த்தால், இன்றைய சிறந்த வீரர்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் புரியும் அவர் எவ்வள்வு சிறந்த வீரர் என்று.

மேட் வின்னிங் இன்னிங்ஸ்கள் என்று எடுத்துக்கொண்டாலும் பல ஆட்டங்கள் இருக்கின்றன. இன்றைய காலகட்டத்தில் அவருக்கு இணையான செயல்பாட்டைக் கொடுத்துக்கொண்டிருக்கிறார் விராட் கோலி. ஆனால் மிகச் சிறந்த ஒரு நாள் வீரர் என்றால் அது சர் விவியன் ரிச்சர்ட்ஸ் தான். அதில் எனக்கு மாற்றுக் கருத்தே இல்லை" என்று கூறியிருக்கிறார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்.

banner

Related Stories

Related Stories