விளையாட்டு

“இதோ பார் அவனால் பந்தை சரியாகப் பார்க்க முடியாது, இது சரியல்ல”: அப்ரார் பற்றிய உண்மையை போட்டுடைத்த நசீம்!

"'இதோ பார் அவன் கண்ணாடி அணிந்திருக்கிறான். மிகவும் தாமதம் ஆகிறது. அவனால் பந்தை சரியாகப் பார்க்க முடியாது. இது சரியல்ல' என்று கூறினேன்.

“இதோ பார் அவனால் பந்தை சரியாகப் பார்க்க முடியாது, இது சரியல்ல”: அப்ரார் பற்றிய உண்மையை போட்டுடைத்த நசீம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வெள்ளிக்கிழமை டிராவில் முடிந்தது. சிறப்பாக விளையாடி சதமடித்த சர்ஃபராஸ் அஹமது ஒன்பதாவது விக்கெட்டாக வெளியேறியபோது, அந்த அணி 287 ரன்கள் எடுத்திருந்தது. 319 ரன்களை சேஸ் செய்த அந்த அணிக்கு, 39 பந்துகளில் 32 ரன்கள் தேவைப்பட்டது.

டெய்ல் எண்டர் நஷீம் ஷாவோடு களத்தில் இணைந்தார் அப்ரார் அஹமது. அந்தத் தருணத்தில் வெற்றி, தோல்வி, டிரா, டை என அனைத்து முடிவுகளுமே சாத்தியமாக இருந்ததால், அந்த கடைசி விக்கெட் பார்ட்னர்ஷிப் என்ன செய்யும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

“இதோ பார் அவனால் பந்தை சரியாகப் பார்க்க முடியாது, இது சரியல்ல”: அப்ரார் பற்றிய உண்மையை போட்டுடைத்த நசீம்!

நசீம் ஷா, அப்ரார் கூட்டணி, 21 பந்துகள் தாக்குப்பிடித்து நியூசிலாந்தின் வெற்றிக் கனவை உடைத்தது. பாகிஸ்தான் இன்னிங்ஸின் 89வது ஓவரை மைக்கேல் பிரேஸ்வெல் வீசினார். அந்த ஓவரில் அவர் ஒரு சிக்ஸரும், ஒரு ஃபோரும் அடிக்க, பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 17 ரன்கள் எடுத்தால் போதும் என்ற நிலை ஏற்பட்டது. அதனால் நியூசிலாந்து அணி சற்று பதற்றமடைந்தது.

இருந்தாலும், 90வது ஓவரின் முடிவுக்குப் பிறகு, ஆட்டம் டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் வெளியிட்டிருக்கும் டிவிட்டர் பதிவில், நசீம் ஷா, அப்ரார் இருவரும் அந்த பரபரப்பபான கடைசி நிமிடங்கள் பற்றிப் பேசியிருக்கிறார்கள். சர்ஃபராஸ் அஹமது வெளியேறி, அப்ரார் களமிறங்கியபோது நடந்த சம்பவங்கள் பற்றி அதில் குறிப்பிட்டிருக்கிறார் நசீம் ஷா.

“இதோ பார் அவனால் பந்தை சரியாகப் பார்க்க முடியாது, இது சரியல்ல”: அப்ரார் பற்றிய உண்மையை போட்டுடைத்த நசீம்!

"அப்ரார் களமிறங்கியபோது நான் டிம் சோதியிடம் 'இதோ பார் அவன் கண்ணாடி அணிந்திருக்கிறான். மிகவும் தாமதம் ஆகிறது. அவனால் பந்தை சரியாகப் பார்க்க முடியாது. இது சரியல்ல' என்று கூறினேன். ஆனால் அப்ரார், ஏதோ இம்ரான் கான் போல ஸ்டைலாக களமிறங்கினார். சரி, இவர் மிகவும் நம்பிக்கையோடு இருக்கிறார் என்று நினைத்தேன்" எனக் கூறினார் நசீம்.

அதுபற்றிப் பேசிய அப்ரார், நசீம் எப்படித் தன்னுடைய நம்பிக்கையை அதிகரித்து பாகிஸ்தானை தோல்வியில் இருந்து காப்பாற்ற உதவினார் என்று குறிப்பிட்டார். "நசீம் என்னிடம் வந்து, 'உன் மீது நம்பிக்கை கொள். நீ பேட்டிங் செய்வதை நான் நெட்ஸில் பார்த்திருக்கிறேன்.

“இதோ பார் அவனால் பந்தை சரியாகப் பார்க்க முடியாது, இது சரியல்ல”: அப்ரார் பற்றிய உண்மையை போட்டுடைத்த நசீம்!

நீ சிறப்பாக விளையாடியிருக்கிறாய். அதிலும் ஸ்பின்னர்களுக்கு எதிராக சிறப்பாக ஆடியிருக்கிறாய்' என்று கூறினார். நான் லெக் ஸ்பின்னர் என்பதால், லெக் ஸ்பின்னர் சோதியை என்னை எதிர்கொள்ளச் சொன்னார். என்னால் கூக்ளி, ஃபிளிப்பர்களை சரியாக கணிக்க முடியும் என்பதால் அந்த முடிவை எடுத்தோம். அவர் ஆஃப் ஸ்பின்னரை எதிர்கொள்ள முடிவு செய்தார். அதுதான் நாங்கள் எடுத்த முடிவு என்று கூறினார்" அப்ரார்.

அதுமட்டுமல்லாமல், மைக்கேல் பிரேஸ்வெல் வீசிய 89வது ஓவரில் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு ஃபோர் அடித்தது பற்றியும், அப்போது நியூசிலாந்து கேப்டன் டிம் சௌத்தியிடம் தான் கூறியது பற்றியும் பேசியிருக்கிறார் நசீம் ஷா. அவர் அந்த ஃபோரும், சிக்ஸரும் அடித்த பிறகு பாகிஸ்தானின் வெற்றிக்கு 17 ரன்கள் எடுத்தால் போதும் என்ற நிலை ஏற்பட்டது.

“இதோ பார் அவனால் பந்தை சரியாகப் பார்க்க முடியாது, இது சரியல்ல”: அப்ரார் பற்றிய உண்மையை போட்டுடைத்த நசீம்!

"இதே ஃபீல்ட் செட் அப்பை தொடர்ந்தால் நான் நிச்சயம் இலக்கை சேஸ் செய்யத் தொடங்கிவிடுவேன் என்று சௌத்தியிடம் கூறினேன். ஆனால் நான் ஒரு ஃபோரும், ஒரு சிக்ஸரும் அடித்த பிறகு சில ஃபீல்டர்களை பின்னால் அனுப்பினார் அவர். அதனால், ரன் எடுப்பது சரியான முடிவு அல்ல என்று முடிவு செய்து டிராவுக்கு ஆடத் தொடங்கினேன்" என்று கூறினார் நசீம் ஷா.

இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் தொடர் நாயகனாக விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் சர்ஃபராஸ் அஹமது தேர்வு செய்யப்பட்டார். இரண்டு போட்டிகளில் 83.75 என்ற சராசரியில் 335 ரன்கள் குவித்தார் அவர். இந்தத் தொடரின் டாப் ரன் ஸ்கோரர் இவர்தான்.

banner

Related Stories

Related Stories