விளையாட்டு

"அவங்கள மாதிரியெல்லாம் எங்களால ஆடமுடியாதுப்பா " -வெளிப்படையாக ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் கேப்டன் !

பிற அணிகளை போல டி20 போன்று டெஸ்ட் கிரிக்கெட்டை எங்களால் விளையாட முடியாது என பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் கூறியுள்ளார்.

"அவங்கள மாதிரியெல்லாம் எங்களால ஆடமுடியாதுப்பா "  -வெளிப்படையாக ஒப்புக்கொண்ட  பாகிஸ்தான் கேப்டன் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

17 வருடங்களுக்குப் பிறகு இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து அங்கு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது. ராவல்பிண்டியில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்த நிலையில், அந்த அணியில் வில் ஜாக்ஸ், லிவிங்ஸ்டன் ஆகிய இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகினர்.

கிட்டத்தட்ட 7 வருடங்களுக்கு பின்னர் டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு பெற்ற டக்கட் மற்றும் கிராவ்லியும் தொடக்கவீரர்களாக களமிறங்கினர். இருவரும் இது டெஸ்ட் போட்டி என்பதையே மறந்து டி20 போட்டி போல பாகிஸ்தான் பந்துவீச்சை ஆரம்பத்தில் இருந்தே நாலாபுறமும் சிதறத்தனர். அதன்பின்னர் வந்த வீரர்களும் அதிரடியாக ரன் குவிக்க இங்கிலாந்து அணி 101 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 657 ரன்கள் குவித்தது.

"அவங்கள மாதிரியெல்லாம் எங்களால ஆடமுடியாதுப்பா "  -வெளிப்படையாக ஒப்புக்கொண்ட  பாகிஸ்தான் கேப்டன் !

அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 579 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அப்துல்லா, இமாம் உல் ஹாக், பாபர் அசாம் உள்ளிட்டோர் சதம் அடித்தனர். பின்னர் இரண்டாம் இன்னிங்க்ஸையும் அதிரடியாக ஆடிய இங்கிலாந்து அணி 35.5 ஓவர்களில் 267 ரன்கள் குவித்து அதிரடியாக டிக்ளர் செய்தது.

343 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய பாகிஸ்தான் அணி சீரிய இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 268 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் 74 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றிபெற்றது.

அதன்பின்னர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. சொந்த மண்ணில் ஏற்பட்ட தோல்வி பாகிஸ்தான் ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

"அவங்கள மாதிரியெல்லாம் எங்களால ஆடமுடியாதுப்பா "  -வெளிப்படையாக ஒப்புக்கொண்ட  பாகிஸ்தான் கேப்டன் !

இங்கிலாந்து அணி அதிரடியாக ஆடும் நிலையில், அதேபோல பாகிஸ்தான் அணியும் ஆடவேண்டும் என்ற கோரிக்கையும் தொடர்ந்து அந்நாட்டில் எழுந்து வருகிறது. இது தொடர்பாக கேள்வி ஒன்னும் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமிடம் எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், "டெஸ்ட் கிரிக்கெட்டை டெஸ்ட் கிரிக்கெட் போல ஆடுகிறோம். பிற அணிகளை போல டி20 போன்ற டெஸ்ட் கிரிக்கெட்டை எங்களால் விளையாட முடியாது. அதிலும் குறிப்பாக எட்டு ரன்ரேட் வைத்து ஒவ்வொரு ஓவருக்கும் ஸ்கோர் செய்ய முடியாது. எங்களின் திட்டங்கள் மற்றும் மாற்றங்களுக்கு ஏற்ப விளையாட வேண்டும். அப்போதுதான் எங்கள் திறன் வெளிப்பட்டு வெற்றிபெறமுடியும்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories