விளையாட்டு

உலகக்கோப்பையில் தொடரில் இருந்து பாதியில் வெளியேறுகிறாரா ரொனால்டோ? பயிற்சியாளருடனான மோதலால் பரபரப்பு !

போர்ச்சுகல் அணியின் சப்ஸ்டிட்யூட்களுக்கான பயிற்சியை கிறிஸ்டியானோ ரொனால்டோ தவிர்த்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உலகக்கோப்பையில் தொடரில் இருந்து பாதியில் வெளியேறுகிறாரா ரொனால்டோ? பயிற்சியாளருடனான மோதலால் பரபரப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ரவுண்டு ஆப்ஃ 16 சுற்று ஆட்டத்தில் போர்ச்சுகல் அணியும் ஸ்சுவிட்சர்லாந்து அணியும் மோதின. இதன் ஆரம்பத்திலேயே உலக ரசிகர்களுக்கும் மைதானத்தில் அமர்ந்திருந்த ரசிகர்களுக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. ஜாம்பவான் வீரரும், போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆடும் லெவனில் இல்லாமல் வெளியே அமரவைக்கப்பட்டார்.

அதிலும் அவருக்கு பதிலாக 21 வயது இளம்வீரர் ரேமோஸ் களமிறக்கப்பட்டார். இத்தனைக்கும் லீக் போட்டிகள் அனைத்திலும் ரொனால்டோவே ஆடும் லெவனில் இடம்பிடித்திருந்த நிலையில், முக்கிய நாக் அவுட் போட்டியில் அவர் உக்காரவைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

உலகக்கோப்பையில் தொடரில் இருந்து பாதியில் வெளியேறுகிறாரா ரொனால்டோ? பயிற்சியாளருடனான மோதலால் பரபரப்பு !

இதனால் போர்ச்சுகல் அணி தடுமாறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆரம்பத்தில் இருந்தே அந்த அணி அசத்தலாக விளையாடியது. அதிலும் ரொனால்டோவுக்கு பதிலாக களமிறக்கப்பட்ட இளம்வீரர் ரேமோஸ் களத்தில் சிறப்பாக செயல்பட்டு ஹட் ட்ரிக் கோல் அடித்து அசத்தினார்.

ஆட்டத்தின் 72-வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணி 5-1 என்ற கணக்கில் வலுவான நிலையில் இருந்தபோது ரொனால்டோ மாற்றுவீரராக களமிறக்கப்பட்டார். பொதுவாக அணி வலுவான நிலையில் இருக்கும்போது அந்த அணியின் முக்கிய வீரரை யாரும் களமிறக்கமாட்டார்கள்.

ஆனால், அந்த நிலையில் ரொனால்டோ களமிறக்கப்பட்டது அவர் அணியில் முக்கிய வீரராக இனியும் கருத்தப்படமாட்டார் என்பதை குறிப்பதாகவே அமைந்தது. அதன்பின்னர் ரொனால்டோ அடித்த கோல் ஒன்றும் ஆப் சைடு என மறுக்கப்பட்டது. ஆட்டம் முடிய சில நிமிடங்களே இருந்த நிலையில் போர்ச்சுகல் மற்றொரு கோல் அடிக்க ஆட்டம் 6-1 என்ற கணக்கில் முடிவுக்கு வந்து போர்ச்சுகல் காலிறுதிக்கு முன்னேறியது.

உலகக்கோப்பையில் தொடரில் இருந்து பாதியில் வெளியேறுகிறாரா ரொனால்டோ? பயிற்சியாளருடனான மோதலால் பரபரப்பு !

இந்த போட்டி முழுக்கவே ரொனால்டோ இறுகிய முகத்தோடுதான் காணப்பட்டார். அணி கோல் அடித்தபோது கூட அவர் பெரிய அளவில் கொண்டாட்டத்தில் ஈடுபடவில்லை. வெற்றிபெற்றபோதும் அதே பாவனையில்தான் காணப்பட்டார். இதனால் அவரின் முகம் அடிக்கடி கேமராவில் காட்டப்பட்டுக்கொண்டே இருந்தது.

ஏற்கனவே கிளப் போட்டிகளில் ரொனால்டோ புறக்கணிக்கப்பட்ட நிலையில், தற்போது தேசிய அணியிலும் அவருக்கு இதுபோன்ற நிலை ஏற்பட்டுள்ளது அவரது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதைத் தொடர்ந்து ரொனால்டோவின் காதலி ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் "உலகின் தலைசிறந்த வீரரை 90 நிமிடங்கள் ரசிக்க முடியாமல் போனது என்ன அவமானம். ரசிகர்கள் ரொனால்டோவை கேட்பதையும் அவரது பெயரைச் சொல்லி கத்துவதையும் நிறுத்தவில்லை. கடவுளும் பெர்னாண்டோவும் சேர்ந்து இதேபோல் இன்னொரு போட்டியிலும் இதே அதிர்ச்சியை எங்களுக்கு தரட்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

உலகக்கோப்பையில் தொடரில் இருந்து பாதியில் வெளியேறுகிறாரா ரொனால்டோ? பயிற்சியாளருடனான மோதலால் பரபரப்பு !

இந்த நிலையில், போர்ச்சுகல் அணியின் சப்ஸ்டிட்யூட்களுக்கான பயிற்சியை கிறிஸ்டியானோ ரொனால்டோ தவிர்த்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பயிற்சிக்கு வராமல் ஜிம்மிலேயே அவர் வழக்கம் போல் பயிற்சி எடுத்த நிலையில், அவர் அணியில் இருந்து பாதியிலேயே விலகுகிறாரா என்ற கேள்வியை இது எழுப்பியுள்ளது.

ஸ்சுவிட்சர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் ரொனால்டோ மீது அந்த அணியின் பயிற்சியாளர் சண்டோஸ்க்கு அதிருப்தி நிலவியதாக கூறப்பட்ட நிலையில், அது குறித்து அவர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால் "எனக்கு என்ன யுக்தி சரியென்று படுகிறதோ எதை நான் நம்புகிறேனோ அதனை களத்தில் பயன்படுத்துவேன்" என்று அவர் கூறியுள்ளதன் மூலம் ரொனால்டோ அடுத்த போட்டியிலும் வெளியேதான் அமர்த்தப்படுவார் என்பது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக ரொனால்டோ ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories