விளையாட்டு

"சாம்சன், இஷான் கிஷான் எல்லாம் எதுக்கு இருக்காங்க? " - ராகுலால் BCCI-யை விமர்சிக்கும் நெட்டிசன்கள் !

சாம்சன், இஷான் கிஷன் போன்ற விக்கெட் கீப்பர்களை அணியில் எடுக்காமல் பகுதிநேர கீப்பர் கே.எல்.ராகுலை விக்கெட் கீப்பராக அணியில் தேர்ந்தெடுத்தது தவறு என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

"சாம்சன், இஷான் கிஷான் எல்லாம் எதுக்கு இருக்காங்க? " - ராகுலால் BCCI-யை விமர்சிக்கும் நெட்டிசன்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்திய அணி தற்போது வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணிக்கு எதிராக 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதன் முதல் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். கே.எல்.ராகுல் மட்டுமே போராடி 73 ரன்கள் குவித்தார். முடிவில் இந்திய அணி 186 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

பின்னர் ஆடிய வங்கதேச அணியும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. 136 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி தோல்வியின் இறுதி நிலையில் இருந்தது. எனினும் கடைசியில் அதிரடியாக ஆடிய மெஹதி ஹாசன் இறுதிவரை களத்தில் இருந்து அணியை வெற்றிபெற வைத்தார்.

"சாம்சன், இஷான் கிஷான் எல்லாம் எதுக்கு இருக்காங்க? " - ராகுலால் BCCI-யை விமர்சிக்கும் நெட்டிசன்கள் !

இந்த போட்டியின்போது கடைசி விக்கெட் வீழ்த்தினால் இந்திய அணி வெற்றியென்ற நிலையில் இருக்கும்போது ஆட்டத்தின் 43 வது ஓவரில் மெஹதி ஹாசன் சிக்ஸர் அடிக்க முயன்றநிலையில் பந்து டாப் எட்ஜ்ஜாகி உயரத்தில் சென்றது. அந்த பந்தை பிடிக்க விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் முயன்றநிலையில் அதனை அவர் தவறவிட்டார். இதனால் இந்திய அணியின் வெற்றிவாய்ப்பு நழுவிப்போனது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து ரசிகர்கள் இந்திய அணி நிர்வாகத்தை கடுமையாக சாடி வருகின்றனர். இந்திய அணியில் பந்த் இல்லையென்றால் அடுத்ததாக திறமைவாய்ந்த சாம்சன், இஷான் கிஷன் போன்றோர் இருக்கிறார்கள். அவர்களை அணியில் எடுக்காமல் பகுதிநேர கீப்பர் கே.எல்.ராகுலை விக்கெட் கீப்பராக அணியில் தேர்ந்தெடுத்தது தவறு என விமர்சித்து வருகின்றனர்.

"சாம்சன், இஷான் கிஷான் எல்லாம் எதுக்கு இருக்காங்க? " - ராகுலால் BCCI-யை விமர்சிக்கும் நெட்டிசன்கள் !

இந்த போட்டிக்கு முன்னதாக ஆடும் 11 வீரர்கள் கொண்ட பட்டியலில் இந்திய வீரர் ரிஷப் பந்த் இடம்பெறவில்லை. அவருக்கு பதில் கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது. அதேநேரம் அணியில் இருக்கும் மற்றொரு விக்கெட் கீப்பராக இஷான் கிஷன் ஆடும் 11 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலில் இடம்பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories