விளையாட்டு

உலகசாதனை படைத்த தமிழ்நாடு வீரரிடம் Spark இல்லையா? ஜெகதீசனை வைத்து தோனியை விமர்சிக்கும் ரசிகர்கள் !

உலகசாதனை படைத்த தமிழ்நாடு வீரர் ஜெகதீசனிடம் ஸ்பார்க் இல்லை என முன்னர் கூறிய தோனியை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

உலகசாதனை படைத்த தமிழ்நாடு வீரரிடம் Spark இல்லையா? ஜெகதீசனை வைத்து தோனியை விமர்சிக்கும் ரசிகர்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உள்நாட்டில் நடக்கும் 50 ஓவர் தொடரான விஜய் ஹசாரே தொடர் நாட்டின் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இந்த ஆண்டு இந்த தொடரின் தமிழ்நாடு அணி தொடர்ந்து சிறப்பாக ஆடி வருகிறது. ஆந்திரா கோவா, சத்தீஸ்கர்,ஹரியானா ஆகிய அணிகளை தமிழ்நாடு அணி வீழ்த்தி தனது பிரிவில் முதல் இடத்தில் உள்ளது.

இந்த நிலையில் இன்று தமிழ்நாடு அணி அருணாச்சலபிரதேச அணியை சந்தித்தது. இதில் முதலில் ஆடிய தமிழ்நாடு அணி ஜெகதீசனின் 277 ரன்கள் என்ற அதிரடி ஆட்டத்தின் உதவியால் 50 ஓவர்களில் 506 ரன்கள் குவித்தது. அதன் பின்னர் ஆடிய அருணாச்சலபிரதேச அணி 7 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.இதன் மூலம் தமிழ்நாடு அணி 435 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.

உலகசாதனை படைத்த தமிழ்நாடு வீரரிடம் Spark இல்லையா? ஜெகதீசனை வைத்து தோனியை விமர்சிக்கும் ரசிகர்கள் !

இந்த தொடரில் தமிழ்நாடு அணியின் தொடக்க வீரர் ஜெகதீசன் ஏற்கனவே தொடர்ச்சியாக 4 சதங்கள் விளாசியிருந்த நிலையில், இன்று அருணாச்சலபிரதேச அணிக்கு எதிரான போட்டியில் 141 பந்துகளில் 15 சிக்ஸர்கள் அடித்து 277 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் 50 முதல் தர 50 ஓவர் போட்டிகளில் ஒரு போட்டியில் அதிக ரன் குவித்த வீரர் என்ற உலகசாதனையையும் படைத்தார்.

அதோடு தொடர்ச்சியாக 5 சதங்கள் குவித்து முதல் தர போட்டியில் தொடர்ச்சியாக அதிக சதம் அடித்த வீரர் என்ற உலகசாதனையையும் படைத்தார். அவருக்கு பாராட்டுக்குள் குவிந்து வரும் நிலையில், அவரை அணியில் இருந்து நீக்கிய CSK அணி நிர்வாகத்தை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். கடந்த 2010ம் ஆண்டு CSK அணியில் இடம்பெற்ற ஜெகதீசனுக்கு அணியில் வாய்ப்பே வழங்கப்படாமல் இருந்தது. அதன்பின்னர் துபாயில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை வீரர்கள் சொதப்ப அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்தது.

உலகசாதனை படைத்த தமிழ்நாடு வீரரிடம் Spark இல்லையா? ஜெகதீசனை வைத்து தோனியை விமர்சிக்கும் ரசிகர்கள் !

அப்போது இளம்வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து CSK கேப்டன் தோனியிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது இளம்வீரர்களிடம் ஸ்பார்க் இல்லை என அவர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது அதன்பின்னர் அவருக்கு 4 போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் அவர் பெரிய அளவில் மோசமான ஆடாத நிலையிலும் அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு மறுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இந்த வாரம் அணியில் இருந்தும் ஜெகதீசனை CSK அணி நிர்வாகம் விடுவித்தது. இந்த நிலையில், ஜெகதீசனின் அபார ஆட்டத்தை கண்டு CSK அணி நிர்வாகம் வருத்தப்பட்டிருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும், உலகசாதனை படைத்த வீரரிடம் ஸ்பார்க் இல்லை எனக் கூறிய தோனியையும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories