விளையாட்டு

#FIFA2022 : 20 லட்சம் கோடி செலவு இந்த மோசமான சாதனைக்காகதானா? கத்தாரை கலாய்த்து தள்ளும் இணையவாசிகள் !

சுமார் 20 லட்சம் கோடி ரூபாய் அளவுக்குச் செலவு செய்தது இப்படி மோசமாக தோற்பதற்கா என கத்தாரை சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

#FIFA2022 : 20 லட்சம் கோடி செலவு இந்த மோசமான சாதனைக்காகதானா? கத்தாரை  கலாய்த்து தள்ளும் இணையவாசிகள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கிட்டத்தட்ட உலகத்தின் பாதி மக்கள் ஆவலோடு எதிர்பார்த்து வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடர் நேற்று இரவு கோலாகலமாக மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான கத்தாரில் தொடங்கியது. ஆசியாவில் நடக்கும் இரண்டாவது கால்பந்து உலகக்கோப்பை தொடராகவும், மத்திய கிழக்கு பகுதியில் நடக்கும் முதல் கால்பந்து உலகக்கோப்பை தொடராகவும் இருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கால்பந்து உலகக்கோப்பை தொடர் கத்தாரில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டதில் இருந்தே இந்த தொடர் பல்வேறு சர்ச்சைகளை சுமந்து வருகிறது. போட்டியை நடத்த உலக கால்பந்து கூட்டமைப்பான பீபாவுக்கு (FIFA)கத்தார் லஞ்சம் கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டு தற்போது வரை கால்பந்து உலகை உலுக்கி வருகிறது.

#FIFA2022 : 20 லட்சம் கோடி செலவு இந்த மோசமான சாதனைக்காகதானா? கத்தாரை  கலாய்த்து தள்ளும் இணையவாசிகள் !

இந்த நிலையில், கோலாகலமாக தொடங்கிய இந்த தொடரின் முதல் போட்டியில் போட்டியை நடத்தும் கத்தார் மற்றும் ஈகுவடார் ஆகிய அணிகள் மோதின. உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் போட்டியை நடத்தும் நாடு தோற்றதில்லை என்ற வரலாறு இருப்பதாலும், இந்த தொடரில் கத்தார் மற்றும் ஈகுவடார் அணிகள் சமபலம் கொண்ட அணிகள் என்பதாலும் இந்த போட்டியில் கத்தார் வெற்றிபெறும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இந்த போட்டி ஆரம்பித்ததில் இருந்தே ஈகுவடார் அணியே ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் மூன்றாவது நிமிடத்திலேயே ஈகுவடார் அணி தலைவர் வாலன்சியா தலையால் முட்டி கோல் அடித்தார். ஆனால் சர்ச்சைக்குள்ளான வகையில் அதற்கு VAR-இல் ஆப் சைடு வழங்கப்பட்டது.

#FIFA2022 : 20 லட்சம் கோடி செலவு இந்த மோசமான சாதனைக்காகதானா? கத்தாரை  கலாய்த்து தள்ளும் இணையவாசிகள் !

பின்னர் கத்தார் அணி கோல் கீப்பர் செய்த தவறால் ஈகுவடாருக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த வாய்ப்பை எந்தப் பதற்றமும் இல்லாமல் கோலாக மாற்றினார் வாலென்சியா. அதன் பின்னரும் ஆதிக்கம் செலுத்திய ஈகுவடார் அணி 31-ஆவது நிமிடத்தில் மற்றொரு கோலை அடித்தது. அந்த அணியின் வாலென்சியா தலையால் முட்டி அணிக்கான கோலை அடித்தார்.

பின்னர் இரு அணிகளும் மேற்கொண்டு கோல் அடிக்காத நிலையில், போட்டியில் ஈகுவடார் அணி 2-0 என்ற கணக்கில் கத்தார் அணியை வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. போட்டியை நடத்தும் கத்தார் அணி தனது அடுத்தடுத்த போட்டியில் பலம் வாய்ந்த சேனக்கல் மற்றும் நெதர்லாந்து அணியை சந்திக்கவுள்ள நிலையில், அதில் வெற்றி பெறுவது கடினமான செயலாகும். இதனால் அந்த அணி இந்த தொடரில் ஒரு வெற்றிகூட பெறாது என எதிர்பார்க்கப்படுகிறது.

#FIFA2022 : 20 லட்சம் கோடி செலவு இந்த மோசமான சாதனைக்காகதானா? கத்தாரை  கலாய்த்து தள்ளும் இணையவாசிகள் !

அதுமட்டுமின்றி போட்டியை நடத்தும் நாடு முதல் போட்டியில் தோல்வியே தழுவாத நிலையில், முதல் போட்டியில் தோல்வியை சந்தித்து உலக அளவில் மோசமான சாதனையை பதிவு செய்துள்ளது. கத்தார் நாடு இந்த உலகக்கோப்பைக்காக எந்த நாடும் செலவு செய்யாத வகையில் சுமார் 20 லட்சம் கோடி ரூபாய் அளவுக்குச் செலவு செய்த நிலையில், அதெல்லாம் இந்த மோசமான சாதனைக்காகதானா என சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories