விளையாட்டு

விஜய் ஹசாரே தொடரில் சதமடித்து தெறிக்க விடும் தமிழ்நாடு ஓபனர்கள்.. இப்போதே குறிவைக்கும் IPL அணிகள் !

உள்நாட்டு தொடரான விஜய் ஹசாரே தொடரில் தமிழ்நாடு தொடக்க வீரர்கள் அதிரடி சதமடித்துள்ள நிலையில், அவர்கள் மேல் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

விஜய் ஹசாரே தொடரில் சதமடித்து தெறிக்க விடும் தமிழ்நாடு ஓபனர்கள்.. இப்போதே குறிவைக்கும் IPL அணிகள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உள்நாட்டில் நடக்கும் 50 ஓவர் தொடரான விஜய் ஹசாரே தொடர் நாட்டின் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. எப்போதுமே 50 ஓவர் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் தொடர்ந்து அசத்தும் தமிழ்நாடு அணி இந்த தொடரிலும் வழக்கம் போல அசதிவருகிறது.

இந்த ஆண்டு தொடரின் பிகாருக்கு எதிரான தமிழக அணியின் முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. ஆனால் அடுத்த ஆட்டத்தில் ஆந்திராவை 9 விக்கெட் வித்தியாசத்தில் தமிழக அணி வீழ்த்தியது. தொடர்ந்து 3-வது ஆட்டத்தில் சத்தீஸ்கர் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி போராடி வீழ்த்தியது.

jagadeesan
jagadeesan

இந்த நிலையில் தமிழ்நாடு அணி தனது 4-வது லீக் போட்டியில் கோவா அணியை சந்தித்தது. இதில் டாஸ் வென்ற கோவா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய தமிழ்நாடு அணியின் தொடக்க வீரர்கள் ஜெகதீசன் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் கோவா பந்து வீச்சை சிதறடித்தனர்.

சாய் சுதர்சன் 13 பௌண்டரிகளுடன் 117 ரன்கள் குவித்து ஆட்டமிழக்க ஜெகதீசன் 6 சிக்ஸர்கள், 15 பவுண்டரிகளுடன் 168 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பின்னர் அபராஜித் மற்றும் ஷாருக்கான் ஆகியோர் அதிரடி காட்ட தமிழ்நாடு அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 373 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய கோவா அணி 50 ஓவர்கள் முடிவில் 316 ரன்கள் மட்டுமே குவித்து தோல்வியைத் தழுவியது.

sai sudharsan
sai sudharsan

இந்த தொடரில் தமிழ்நாடு அணியின் தொடக்க வீரரான ஜெகதீசன் தொடர்ந்து 3 சதங்கள் அடித்து அதிரடி காட்டிய நிலையில், மற்றொரு தொடக்க வீரர் சாய் சுதர்சன் தொடர்ச்சியாக இரண்டு சதங்கள் அடித்துள்ளார். இதில் கடந்த சீசனில் சென்னை அணியில் இடம்பெற்றிருந்த ஜெகதீசன் இந்த முறை அணியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், தற்போது இவரின் அதிரடி ஆட்டத்தால் இவரை மும்பை,கொல்கத்தா போன்ற அணிகள் குறிவைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் அணி சாய் சுதர்சனை தக்கவைத்துள்ள நிலையில், இந்த சீசனில் அவரை அந்த அணி நன்கு பயன்படுத்தும் என எதிர்பார்ப்பது எழுந்துள்ளது.

banner

Related Stories

Related Stories