விளையாட்டு

"கர்மா என்றால் என்ன என்று தெரியுமா ?" -மட்டமாக விமர்சித்த பாக். முன்னாள் வீரருக்கு முஹம்மது சமி பதிலடி !

தன்னையும், இந்திய அணியையும் விமர்சித்த முன்னாள் பாகிஸ்தான் வீரர் சோயப் அக்தருக்கு இந்திய வீரர் மொஹம்மது சமி பதிலடி கொடுத்துள்ளார்.

"கர்மா என்றால் என்ன என்று தெரியுமா ?" -மட்டமாக விமர்சித்த பாக். முன்னாள் வீரருக்கு முஹம்மது சமி பதிலடி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஆஸ்திரேலியாவில் 8வது டி20 உலகக் கோப்பை அக்டோபர் 16ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் சூப்பர் 12 சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில், குரூப் 1-ல் இருந்து நியூஸிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அதேபோல குரூப் 2-ல் இருந்து இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

இதில் முதல் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் -நியூஸிலாந்து அணிகள் சிட்னி மைதானத்தில் மோதின. இந்த போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது. அதேபோல அடிலைட்டில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது.

"கர்மா என்றால் என்ன என்று தெரியுமா ?" -மட்டமாக விமர்சித்த பாக். முன்னாள் வீரருக்கு முஹம்மது சமி பதிலடி !

இந்திய அணியின் இந்த தோல்வியைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் இந்திய அணியை மோசமான விமர்சித்து வந்தனர். இந்திய முன்னாள் வீரர்கள் மட்டுமின்றி பாகிஸ்தான் முன்னாள் வீரர்களும் இந்திய அணியை சரமாரியாக விமர்சித்தனர்.

அதிலும், பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் அக்தர், "அரையிறுதிக்கு வருவது பெரிதல்ல, வெல்வதுதான் பெரிது. இறுதிப்போட்டியில் விளையாட இந்திய அணி தகுதியானது அல்ல" என்று கூறியிருந்தார். மேலும், " முஹம்மது சமி அணியில் இடம்பெற தகுதியற்றவர். 'திடீரென ஷமியை அணியில் சேர்த்துள்ளனர். இந்திய அணியில் இடம்பெற ஷமிக்கு தகுதியில்லை" என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், தற்போது இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியிடம் தோல்வியைத் தழுவியுள்ளது. இதனைத் தொடர்ந்து தன்னையும், இந்திய அணியையும் விமர்சித்த சோயப் அக்தருக்கு இந்திய வீரர் மொஹம்மது சமி பதிலடி கொடுத்துள்ளார்.

பாகிஸ்தான் தோல்வியைத் தொடர்ந்து சோயிப் அக்தர் தனது டுவிட்டர் பக்கத்தில் இதயம் நொறுங்கியது போன்ற குறியீட்டை பதிவு செய்த நிலையில், இதற்கு இந்திய அணியின் நட்சத்திர வீரரான ஷமி ''மன்னிக்கவும், சகோதரரே இதுதான் கர்மா'' என்று கூறி தன்னை விமர்சித்ததற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

banner

Related Stories

Related Stories