விளையாட்டு

“மைதானத்திற்குள் நுழைந்த சிறுவன்.. தரதரவென இழுத்து சென்ற security”: மனிதநேயம் காட்டிய ரோஹித் ஷர்மா! VIDEO

ரோஹித் ஷர்மாவை சந்திக்க போட்டியின் போது மைதானத்திற்குள் நுழைந்த ரசிகருக்கு ரூபாய் 6.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

“மைதானத்திற்குள் நுழைந்த சிறுவன்.. தரதரவென இழுத்து சென்ற security”: மனிதநேயம் காட்டிய ரோஹித் ஷர்மா! VIDEO
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ஜிம்பாப்வேயை 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா. ஏற்கனவே அரையிறுதிக்கு இந்தியா தகுதி பெற்ற நிலையில், இன்றைய போட்டியில், 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது.

இதனிடையே ஆட்டத்தின் போது, ​​ரோஹித் ஷர்மாவைச் சந்திக்க விரும்பி ரசிகர் ஒருவர் அனுமதியின்றி மைதானத்திற்குள் நுழைந்துள்ளார். அவர் மைதானத்திற்குள் நுழைந்து இந்திய அணியின் கேப்டன் ​​ரோஹித் ஷர்மா சந்திக்கச் சென்றுள்ளார்.

பின்னர் சிறுவன் மைதானத்திற்கு ஓடுவதை பார்த்த பாதுகாப்பு அதிகாரிகள் சிறுவனை மடக்கி பிடித்து இழுத்துச் சென்றனர். இதனைக்கண்ட ​​ரோஹித் ஷர்மா சிறுவனை தட்டிக்கொடுத்தார். இந்த சம்பவத்தால் போட்டி ஒரு நிமிடம் தாமதமானது.

போட்டியின்போது அனுமதியின்றி மைதானத்திற்குள் நுழைந்த சிறுவனுக்கு அபாராதம் விதிக்கப்பட்டுள்ளது. சுமார் இந்திய மதிப்பில், 6.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் போட்டி தொடங்கியது.

அப்போது இறுதியில் 17.2 ஓவர்களில் 115 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டை இழந்த ஜிம்பாவே அணியை 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி. இந்தபோட்டியில் அஸ்வின் 3 விக்கெட்டும் பாண்டிய மற்றும் ஷமி தலா 2 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதனால் குரூப்-1 பிரிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளும், குரூப் -2 பிரிவில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. நவம்பர் 9ஆம் தேதி சிட்னியில் நடைபெறும் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணியை, இங்கிலாந்து மோதுகின்றனது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories