விளையாட்டு

"ICC இந்திய அணிக்கு சாதகமாக என்ன செய்தது சொல்லுங்க?" - அப்ரிடி குற்றச்சாட்டுக்கு BCCI தலைவர் பதிலடி !

ஐசிசி இந்திய அணிக்கு சாதகமாக செயல்படுவதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்ரிடி கூறியதற்கு பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

"ICC இந்திய அணிக்கு சாதகமாக என்ன செய்தது சொல்லுங்க?" - அப்ரிடி குற்றச்சாட்டுக்கு BCCI தலைவர் பதிலடி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஆஸ்திரேலியாவில் 8-வது டி20 உலகக் கோப்பை அக்டோபர் 16ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி தனது முதல் போட்டியை பாகிஸ்தான் அணியுடன் மோதியது. அந்த போட்டியில் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் விரைவில் ஆட்டம் இழந்த நிலையில், இறுதி கட்டத்தில் விஸ்வரூபம் எடுத்த கோலி இறுதிவரை களத்தில் இருந்து அணியை வெற்றிபெற வைத்தார்.அந்த போட்டியில் அவர் 53 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 82 ரன்கள் எடுத்திருந்தார்.

அடுத்ததாக நெதர்லாந்து அணியுடனான போட்டியிலும் சிறப்பாக ஆடிய கோலி அந்த போட்டியிலும் ஆட்டமிழக்காமல் 44 பந்துகளில் 62 ரன்கள் குவித்தார். இந்த போட்டியிலும் இந்திய அபார வெற்றி பெற்றது. பின்னர் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் மீண்டும் சிறப்பாக ஆடிய விராட் கோலி அந்த போட்டியில் 44 பந்துகளில் 64 ரன்கள் குவித்தார்.

"ICC இந்திய அணிக்கு சாதகமாக என்ன செய்தது சொல்லுங்க?" - அப்ரிடி குற்றச்சாட்டுக்கு BCCI தலைவர் பதிலடி !

இந்த போட்டியில் வங்கதேசம் பேட்டிங் ஆடியபோது ஒரு சர்ச்சை எழுந்தது. 7வது ஓவரில் அக்சர் பட்டேல் வீசிய பந்தை லிட்டன் தாஸ் ஆஃப்-சைட்டில் அடித்தார். பந்தை எடுத்த அர்ஷ்தீப் சிங் த்ரோவை அனுப்பியபோது, ​​பாயிண்டில் நின்ற கோலி பந்து அவரைத் தாண்டிச் செல்லும்போது ஸ்டம்பிக்கு பிடித்து வீசுவது போல பாவனை செய்தார். அந்த நேரத்தில், கள நடுவர்களான மரைஸ் எராஸ்மஸ் மற்றும் கிறிஸ் பிரவுன் ஆகியோர் நடவடிக்கை எடுக்கவில்லை. வங்கதேச வீரர்களும் அதனை கவனிக்கவில்லை.

ஆனால் போட்டி முடிந்த பின்னர் கோலியின் இந்த செயல் ஐசிசி-யின் விதி 41.5.1-ன் படி இந்திய வீரர் கோலி இப்படி செய்தது தவறானது எனவும், இந்த விதியின்கீழ் பேட்ஸ்மேனை ஏமாற்றுவதால் பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள் பெனால்டியாக வழங்கப்படவேண்டும் என்றும் வங்கதேச ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

"ICC இந்திய அணிக்கு சாதகமாக என்ன செய்தது சொல்லுங்க?" - அப்ரிடி குற்றச்சாட்டுக்கு BCCI தலைவர் பதிலடி !

மேலும், இந்த விவகாரத்தில் ஐசிசி இந்திய அணிக்கு சாதகமாக செயல்படுவதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்ரிடி விமர்சித்திருந்தார். அந்த விமர்சனத்துக்கு பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், 'அப்ரிடி கூறும் குற்றச்சாட்டு சரியானது இல்லை. ஐசிசி எந்த அணிக்கும் சாதகமாக செயல்படுவதாக நான் கருதவில்லை. அனைத்து அணிகளையும் ஒரே மாதிரியாகத்தான் ஐசிசி நடத்துகிறது. நீங்கள் சொல்வதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.மற்ற அணிகளை விட இந்திய அணிக்கு சாதகமாக என்ன கிடைக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள். கிரிக்கெட் உலகில் இந்தியா பலம் வாய்ந்த அணியாக இருக்கிறது." என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories