விளையாட்டு

"வெறும் சாண்ட்விச்தான்.. அதுவும் ஆறிப்போய் இருக்கிறது"- ஆஸ்திரேலிய வாரியம் மீது இந்திய அணி புகார் !

சிட்னியில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு வழங்கப்பட்ட உணவு சரியில்லை என பிசிசிஐ புகார் தெரிவித்துள்ளது.

"வெறும் சாண்ட்விச்தான்.. அதுவும் ஆறிப்போய் இருக்கிறது"- ஆஸ்திரேலிய வாரியம் மீது இந்திய அணி புகார் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஆஸ்திரேலியாவில் 8வது டி20 உலகக் கோப்பை நேற்று ஆக்டோபர் 16ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் தகுதி சுற்றில் இலங்கை,அயர்லாந்து, நெதர்லாந்து, ஜிம்பாப்பே அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியது. 2 முறை சாம்பியனான வெஸ்ட்இண்டீஸ் அணி தகுதி சுற்றில் தோல்வியைத் தழுவி தொடரை விட்டு வெளியேறியது.

அதைத் தொடர்ந்து நடைபெற்ற சூப்பர் 12 பிரிவில் இந்திய அணி தனது முதல் போட்டியை பாகிஸ்தான் அணியுடன் மோதியது.இதில் டாஸ் வென்று இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.அதன் படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 159 ரன்களை எடுத்து 160 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. பின்னர் இந்திய அணி சார்பில் களமிறங்கிய முன்னணி பேட்ஸ்மேன்கள் கேப்டன் ரோஹித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ், அக்சர் பட்டேல் ஆகியோர் மிகவும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

"வெறும் சாண்ட்விச்தான்.. அதுவும் ஆறிப்போய் இருக்கிறது"- ஆஸ்திரேலிய வாரியம் மீது இந்திய அணி புகார் !

பின்னர் ஜோடி சேர்ந்த கோலி, பாண்டியா ஆகியோர் பாகிஸ்தான் பந்துவீச்சை சிதறடித்து இறுதி ஓவரில் 16 ரன்கள் தேவை என்ற நிலைக்கு கொண்டுவந்தனர். இறுதி ஓவரின் 4-வது பந்தை பந்துவீச்சாளர் கோலியின் இடுப்பு உயரத்துக்கு வீச அதை சிக்ஸருக்கு விளாசினார் கோலி . இடுப்பு உயரத்துக்கு வந்ததால் அந்த பந்தை நடுவர் நோ பால் என அறிவிக்க அடுத்த பந்து வைட் ஆக, தொடர்ந்து வந்த ப்ரீ ஹிட் பந்து ஸ்டம்பை தாக்க அதன் மூலம் 3 ரன்கள் எடுத்தார் கோலி. இப்படி இறுதிக்கட்ட பரபரப்புக்கு நடுவே இந்திய அணி அந்த பரபரப்பான போட்டியில் அபார வெற்றிபெற்றது.

அதைத் தொடர்ந்து நாளை சிட்னியில் நடைபெறவுள்ள போட்டியில் நெதர்லாந்து அணியுடன் இந்திய அணி மோதவுள்ளது. இதற்காக சிட்னியில் இந்திய அணி பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றது. இந்த நிலையில்,சிட்னியில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு வழங்கப்பட்ட உணவு சரியில்லை என பிசிசிஐ புகார் தெரிவித்துள்ளது.

"வெறும் சாண்ட்விச்தான்.. அதுவும் ஆறிப்போய் இருக்கிறது"- ஆஸ்திரேலிய வாரியம் மீது இந்திய அணி புகார் !

இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில், இந்திய அணி வீரர்களுக்கு சரியான உணவு வழங்கப்படவில்லை எனவும், அவர்களுக்கு சாண்ட்விச் மட்டுமே கொடுக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. அதோடு அப்படி வழங்கப்பட்ட உணவு ஆறிபோனதாகவும், நல்ல உணவாக இல்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து இந்திய அணி வீரர்கள் ஐசிசியிடம் புகார் தெரிவித்துள்ளதாகவும் பிசிசிஐ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories