விளையாட்டு

"உலகக்கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெரும் அணிகள் இதுதான்" -கிரிக்கெட்டின் கடவுளே கூறிய அணிகள் என்னென்ன ?

உலகக்கோப்பை அரையிறுதிக்கு இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் தகுதி பெரும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

"உலகக்கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெரும் அணிகள் இதுதான்" -கிரிக்கெட்டின் கடவுளே கூறிய அணிகள் என்னென்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஆஸ்திரேலியாவில் 8வது டி20 உலகக் கோப்பை நேற்று ஆக்டோபர் 16ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற முதல் போட்டியிலேயே நமீபியாவிடம் இலங்கை அணி அதிர்ச்சி தோல்வியடைந்தது. அதைத் தொடர்ந்து ஸ்காட்லாந்து அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது.

இதன் காரணமாக இந்த தொடர் எல்லா அணிகளுக்கும் ஒரு பெரிய சவாலாக இருக்கும் என்பதையே நமீபியா, ஸ்காட்லாந்து அணிகளின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளது. இதனிடையே பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவையும், இங்கிலாந்து அணி பாகிஸ்தானையும் வீழ்த்தியது.

"உலகக்கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெரும் அணிகள் இதுதான்" -கிரிக்கெட்டின் கடவுளே கூறிய அணிகள் என்னென்ன ?

இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை அக்டோபர் 23-ம் தேதி சந்திக்கிறது. மேலும் இந்த டி20 உலகக் கோப்பை வெல்ல இந்திய அணிக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக முன்னாள் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் உலகக்கோப்பை தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேட்டியளித்த அவர், "இப்போதெல்லாம் வீரர்கள் வலைப்பயிற்சியில் பல்வேறு வகையான ஷாட்களை பயிற்சி செய்கிறார்கள். பேட்டிங்கிலும் சரி, பீல்டிங்கிலும் சரி, நுணுக்கமான, விதவிதமான பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். இதனால் அவர்கள் நிபுணத்துவம் வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். நாங்கள் விளையாடிய காலத்தில் நாங்கள் எப்போதாவதுதான் அதுபோல் பயிற்சி செய்வோம்.

"உலகக்கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெரும் அணிகள் இதுதான்" -கிரிக்கெட்டின் கடவுளே கூறிய அணிகள் என்னென்ன ?

இது போன்ற ஷாட்கள் சூர்யகுமார் யாதவை ஒரு சிறந்த வீரராக மாற்றிவிட்டது. அவர் இன்று மிகவும் நம்பிக்கையுடன் விளையாடுகிறார். டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நான்கு அணிகள் தகுதி பெறும் என நான் எதிர்பார்க்கிறேன். தென்னாப்பிரிக்கா அணியை பொறுத்தவரையில் அந்த அணி அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் விளையாடி பழக்கப்பட்டது என்பதால் அந்த அணியும் அரையிறுதிக்கு நுழையும் வாய்ப்பிருக்கிறது'' எனக் கூறினார்.

banner

Related Stories

Related Stories