விளையாட்டு

"இங்க அடிச்சா சிக்ஸர் போகும்.. அங்க அடிச்சா கைக்குதான் போகும்" -இந்திய வீரர்களுக்கு கவாஸ்கர் எச்சரிக்கை !

ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் இந்திய பேட்ஸ்மேன்கள் தங்களுடைய யுக்திகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

"இங்க அடிச்சா சிக்ஸர் போகும்.. அங்க அடிச்சா கைக்குதான் போகும்" -இந்திய வீரர்களுக்கு கவாஸ்கர் எச்சரிக்கை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஆஸ்திரேலியாவில் 8வது டி20 உலகக் கோப்பை நேற்று ஆக்டோபர் 16ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற முதல் போட்டியிலேயே நமீபியாவிடம் இலங்கை அணி அதிர்ச்சி தோல்வியடைந்தது. அதைத் தொடர்ந்து ஸ்காட்லாந்து அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது.

இதன் காரணமாக இந்த தொடர் எல்லா அணிகளுக்கும் ஒரு பெரிய சவாலாக இருக்கும் என்பதையே நமீபியா, ஸ்காட்லாந்து அணிகளின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளது. இதனிடையே பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவையும், இங்கிலாந்து அணி பாகிஸ்தானையும் வீழ்த்தியது.

"இங்க அடிச்சா சிக்ஸர் போகும்.. அங்க அடிச்சா கைக்குதான் போகும்" -இந்திய வீரர்களுக்கு கவாஸ்கர் எச்சரிக்கை !

இந்த பயிற்சி போட்டியில் இந்திய அணியின் ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட வீரர்கள் சிக்ஸர் அடிக்க முயற்சித்து எல்லை கோட்டருகே கேட்ச் பிடிக்கப்பட்டு ஆட்டமிழந்தனர். அவர்கள் அடித்த அந்த ஷாட்கள் இந்தியா அல்லது ஆசிய மைதானங்களில் சிக்ஸர்களாக மாறியிருக்கும். ஆனால், ஆஸ்திரேலியாவில் பெரிய மைதானங்கள் என்பதால் அவை கேட்ச் பிடிக்கப்பட்டன.

இந்த நிலையில், இந்திய பேட்ஸ்மேன்கள் தங்களுடைய யுக்திகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "ஆஸ்திரேலிய மைதானம் மிகவும் பெரியது. இங்கே சிக்சர் அடிப்பதில் அதிக கவனம் தேவை. அங்கு சிக்ஸருக்கு செல்ல வேண்டிய பந்துகள் கேட்சாக மாறும். இதனால் இந்திய வீரர்கள் இனி கவனமாக விளையாட வேண்டும்.

"இங்க அடிச்சா சிக்ஸர் போகும்.. அங்க அடிச்சா கைக்குதான் போகும்" -இந்திய வீரர்களுக்கு கவாஸ்கர் எச்சரிக்கை !

மைதானத்தில் சிறிய பகுதியைத் தேர்ந்தெடுத்து அங்கு சிக்ஸர் அடிக்க முயற்சிக்கலாம், அல்லது இரண்டு பீல்டர்களுக்கு இடையே நான்கு ரன்களுக்கு ஆடலாம். மோசமான பந்துகளை மட்டும் சிக்ஸர் அடிக்கலாம். ஆஸ்திரேலிய போன்ற பெரிய மைதானங்களில் ஓடி ஓடி ரன்களை எடுப்பது மிகவும் அவசியம். இரண்டு ரன்கள் ,3 ரன்கள் என அதிகமாக ஓடினால் ஸ்கோர் உயரும். இதனை பயிற்சியாளர் டிராவிட் அணி வீரர்களுக்கு எடுத்துக்கூறுவார் என நம்பலாம்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories