விளையாட்டு

"இந்த வீரர் ஆட்டத்தையே மாற்றி விடுவார்.."- இந்திய வீரர் குறித்து பாக். முன்னாள் வீரர் எச்சரிக்கை !

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஆகிப் ஜாவத் ஹர்திக் பாண்டியாவிடம் பாகிஸ்தான் வீரர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என பாகிஸ்தானை எச்சரித்துள்ளார்.

"இந்த வீரர் ஆட்டத்தையே மாற்றி விடுவார்.."- இந்திய வீரர் குறித்து பாக். முன்னாள் வீரர் எச்சரிக்கை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஆஸ்திரேலியாவில் வரும் 16-ம் தேதி பலரால் எதிர்பார்க்கப்பட்ட உலகக்கோப்பை டி20 தொடர் தொடங்கவுள்ளது. ந்த தொடரில் வெற்றி பெறும் நோக்கில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்ளிட்ட அணியின் வீரர்கள் தயாராகி வருகின்றனர்.

இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை அக்டோபர் 23-ம் தேதி சந்திக்கிறது. மேலும் இந்த டி20 உலகக் கோப்பை வெல்ல இந்திய அணிக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக முன்னாள் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

"இந்த வீரர் ஆட்டத்தையே மாற்றி விடுவார்.."- இந்திய வீரர் குறித்து பாக். முன்னாள் வீரர் எச்சரிக்கை !

இருப்பினும் இந்திய அணி வீரர்களின் ஆட்டங்கள் தொடர்ந்து ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியே வருகிறது.இந்திய அணியில் ஜடேஜா,பும்ரா போன்ற முன்னணி வீரர்கள் காயத்தால் ஆடாத நிலையில், இந்தியா இந்த தொடரை எப்படி அணுகப்போகிறது என்ற மிகப்பெரிய கேள்வி ஒன்னும் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. காயமடைந்த பும்ராவுக்கு பதிலாக இந்திய அணியில் முகமது சமி சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஆகிப் ஜாவத் ஹர்திக் பாண்டியாவிடம் பாகிஸ்தான் வீரர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என பாகிஸ்தானை எச்சரித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "பும்ரா இல்லாததால் இந்திய அணி பலம்மிக்கதாக தெரியவில்லை. இதனால் பாகிஸ்தான் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நன்றாக விளையாட வேண்டும். குறிப்பாக இடதுகை பேட்ஸ்மேன்கள் மிடில் ஆர்டரில் இருப்பது பாகிஸ்தானுக்கு கூடுதல் பலமாக இருக்கும்.

"இந்த வீரர் ஆட்டத்தையே மாற்றி விடுவார்.."- இந்திய வீரர் குறித்து பாக். முன்னாள் வீரர் எச்சரிக்கை !

இந்தியா பாகிஸ்தான் போட்டியில் தற்போது வரை பாகிஸ்தான் அணி டிரைவர் சீட்டில் இருக்கிறது. ஆனால் இந்திய அணியில் பினிஷர் ரோலில் இருக்கும் ஹர்திக் பாண்டியாவை குறைத்து எடை போடக்கூடாது. எந்த நேரத்திலும் ஆட்டத்தை போக்கை மாற்றக்கூடிய கேம்-சேஞ்சராக இருப்பார். பந்துவீச்சிலும் அவரது ஆதிக்கம் சற்று அதிகமாகவே தெரியும் என்பதால், பாகிஸ்தான் வீரர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்." என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories