விளையாட்டு

"இது இந்திய B அணியா? நான் அப்படி சொல்லவே மாட்டேன்" -தென்னாபிரிக்க வீரர் கேசவ் மஹாராஜ் பேட்டி !

இந்த இந்திய அணியை B டீம் இந்திய தரப்பு என்று அழைக்க மாட்டேன் என தென்னாபிரிக்க வீரர் கேசவ் மஹாராஜ் கூறியுள்ளார்.

"இது இந்திய B அணியா? நான் அப்படி சொல்லவே மாட்டேன்" -தென்னாபிரிக்க வீரர் கேசவ் மஹாராஜ் பேட்டி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது இந்திய அணி. மழையால் பாதிக்கப்பட்ட இந்தப் போட்டி 40 ஓவர்களாகக் குறைக்கப்பட, 250 என்ற பெரிய இலக்கை சேஸ் செய்தது இந்திய அணி. அணியின் டாப் ஆர்டர் வேகமாக சரிந்த நிலையில் சஞ்சு சாம்சன் (86 நாட் அவுட்), ஷ்ரேயாஸ் ஐயர் (50) ஆகியோர் தங்களுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருந்தாலும் அவர்களால் இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை.

கடைசி ஓவரில் இந்திய அணி வெற்றி பெற 30 ரன்கள் தேவை என்றிருந்தபோது, தப்ராய்ஸ் ஷம்ஸி வீசிய அந்த ஓவரில் 20 ரன்கள் விளாசினார் சஞ்சு சாம்சன். இறுதியில் தென்னாப்பிரிக்க அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

"இது இந்திய B அணியா? நான் அப்படி சொல்லவே மாட்டேன்" -தென்னாபிரிக்க வீரர் கேசவ் மஹாராஜ் பேட்டி !

இந்த தொடரில் முக்கிய வீரர்கள் கொண்ட இந்திய அணி டி20 உலகக்கோப்பையில் பங்கேற்க ஆஸ்திரேலியா சென்றதால் இது இந்திய B அணி என்றே வர்ணிக்கப்பட்டது. ஆனால், இந்த இந்திய அணியை B டீம் இந்திய தரப்பு என்று அழைக்க மாட்டேன் என தென்னாபிரிக்க வீரர் கேசவ் மஹாராஜ் கூறியுள்ளார்.

இரண்டாவது போட்டிக்கு முன்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் " இந்தியாவிடம் நிறைய திறமைகள் உள்ளன. அவர்களால் நான்கு - ஐந்து வகையிலான சர்வதேச அணிகளை எப்போது வேண்டுமானாலும் களமிறக்க முடியும். இந்திய வீரர்களுக்கு ஐபிஎல் அனுபவம் உள்ளது. உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் இந்திய அணியில் இருக்கிறார்கள். அவர்கள் உலகத்தரம் வாய்ந்த பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளனர்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories