விளையாட்டு

லெஜண்ட்ஸ் கிரிக்கெட் லீக் - சாம்பியன் பட்டம் வென்ற கம்பீரின் இந்தியா கேபிட்டல்ஸ் அணி !

லெஜண்ட்ஸ் கிரிக்கெட் லீக் (LLC) தொடரின் முதல் சீசனில் இந்தியா கேபிடல்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

லெஜண்ட்ஸ் கிரிக்கெட் லீக் - சாம்பியன் பட்டம் வென்ற கம்பீரின் இந்தியா கேபிட்டல்ஸ் அணி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த சில வாரங்களாக நடந்த வந்த லெஜண்ட்ஸ் கிரிக்கெட் லீக் (LLC) தொடரின் முதல் சீசனில் இந்தியா கேபிடல்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறது. புதன்கிழமை இரவு ஜெய்ப்பூரின் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடந்த இறுதிப் போட்டியில், பில்வாரா கிங்ஸ் அணியை 104 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் ஆனது இந்தியா கேபிடல்ஸ்.

கௌதம் கம்பீர் தலைமையிலான இந்தியா கேபிடல்ஸ் அணி ஆரம்பத்தில் பெரிதாகத் தடுமாறியது. இருந்தாலும் கடைசி கட்ட அதிரடியால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 211 ரன்கள் குவித்தது. மிகப் பெரிய இலக்கை செஸ் செய்த கிங்ஸ், நெருக்கடியை சமாளிக்க முடியாமல் 18.2 ஓவர்களிலேயே 107 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

லெஜண்ட்ஸ் கிரிக்கெட் லீக் - சாம்பியன் பட்டம் வென்ற கம்பீரின் இந்தியா கேபிட்டல்ஸ் அணி !

முதலில் பேட்டிங் செய்த கேபிடல்ஸுக்கு அதிகபட்சமாக நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ராஸ் டெய்லர் 82 ரன்கள் அடித்தார். வெறும் 41 பந்துகளில் 200 என்ற ஸ்டிரைக் ரேட்டோடு இந்த ஸ்கோரை அடித்தார் அவர். அதேபோல் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஜான்சன் 35 பந்துகளில் 62 ரன்கள் விளாசினார் அவர். அவர்கள் இருவரும் இணைந்து ஐந்தாஅது விக்கெட்டுக்கு 126 ரன்கள் சேர்த்தனர். ஒரு மிகப் பெரிய இலக்கை சேஸ் செய்த கிங்ஸுக்கு ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் கூட அமையவில்லை.

கிங்ஸ் அணியின் ஓப்பனர்கள் இருவரும் முதல் நான்கு ஓவர்களுக்குள்ளாகவே வெளியேறினர். மோர்னே வான் விக் 5 ரன்களும், வில்லியம் போர்டர்ஃபீல்ட் 12 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்திய அதிரடி வீரர் யுசுப் பதான் மீது எதிர்பார்ப்பும் நெருக்கடியும் அதிகம் ஆனது. ஆனால் அவராலும் அதிக நேரம் நீடித்து நிலைக்க முடியவில்லை. வெறும் ஆறே ரன்களில் அவர் வெளியேறினார். ஓரளவு தாக்குப்பிடித்து 27 ரன்கள் எடுத்த ஷேன் வாட்சனும் துருதிருஷ்ட வசமாக ரன் அவுட் ஆனார். ஜெசல் காரியா ஓரளவு நம்பிக்கை கொடுத்தாலும் 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கிங்ஸ் அணியின் கேப்டன் இர்ஃபான் பதான் 12வது ஓவரில் (2 ரன்கள்) ஆட்டமிழந்தபோதே அந்த அணியின் வெற்றி வாய்ப்பு முடிவுக்கு வந்துவிட்டது.

லெஜண்ட்ஸ் கிரிக்கெட் லீக் - சாம்பியன் பட்டம் வென்ற கம்பீரின் இந்தியா கேபிட்டல்ஸ் அணி !

கேபிடல்ஸ் பௌலர்களில் பவன் சூயல் 27 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பங்கஜ் சிங் 14 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஸ்பின்னர் பிரவீன் தாம்பே 19 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

முதலில் பேட்டிங் செய்த கேபிடல்ஸ் அணி மான்டி பனேசர், ராகுல் சர்மா ஆகியோரின் சுழலில் சிக்கி 21 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்தது. ஆனால் ராஸ் டெய்லர், ஜான்சன் ஆகியோரின் கவுன்ட்டர் அட்டாக்கால் மகத்தான கம்பேக்கை அரங்கேற்றியது அந்த அணி. அவர்கள் இன்னிங்ஸின் ஒன்பதாவது ஓவரில் யுசுப் பதானை எதிர்கொண்ட ராஸ் டெய்லர், 4 சிக்ஸர்கள், 1 பௌண்டரி விளாசி 30 ரன்கள் குவித்தார். அதுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.

banner

Related Stories

Related Stories