விளையாட்டு

"இந்திய அணியில் நான் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை" - பிரபல வீரர் சோகம் !

இந்த முறை இந்திய டி20 அணியில் நான் இல்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என் இந்திய வீரர் பும்ரா கூறியுள்ளார்.

"இந்திய அணியில் நான் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை" - பிரபல வீரர் சோகம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஆஸ்திரேலியாவில் நடக்கவிருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா விளையாடமாட்டார் என்று அறிவித்தது பிசிசிஐ. முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் பங்கேற்பது கடந்த சில நாள்களாகவே பெரிய பேசுபொருளாக இருந்து வந்தது. இந்நிலையில் அவர் உலகக் கோப்பை அணியில் இருக்க மாட்டார் என்பதை உறுதி செய்தது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். இந்நிலையில் முதல் முறையாக தன்னுடைய காயம் பற்றிப் பேசியிருக்கிறார் பும்ரா.

எதிர்பாராத இந்தக் காயத்தால் உலகக் கோப்பையில் விளையாட முடியாதது எவ்வளவு வலியை ஏற்படுத்தியிருக்கிறது என்று தன்னுடைய ட்வீட் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார் பும்ரா. "இந்த முறை இந்திய டி20 அணியில் நான் இல்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் நான் குணமடையவேண்டும் என்று பிராத்தித்தவர்களுக்கு, அன்பை செலுத்தியவர்களுக்கு, ஆதரவாக இருந்தவர்களுக்கு - எல்லோருக்கும் நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். குணமாகும் இந்தக் காலகட்டத்தில் ஆஸ்திரேலியாவில் இந்திய அணி வெற்றி பெறுவதற்காக என்னுடைய ஆதரவைத் தொடர்ந்து கொடுத்துக்கொண்டே இருப்பேன்" என்று தன்னுடைய ட்வீட்டில் தெரிவித்திருக்கிறார் அவர்.

"இந்திய அணியில் நான் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை" - பிரபல வீரர் சோகம் !

தொடர்ந்து முதுகுப் பிரச்சனையால் அவதிப்பட்டு வருவதால் பும்ரா இந்த உலகக் கோப்பை தொடரில் ஆட முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. தற்போது நடந்த வரும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான சர்வதேச டி20 தொடரில் பும்ராவின் இடத்தை வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் நிரப்பினார். பும்ரா இல்லாமல் விளையாடிய இந்திய அணி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது சர்வதேச டி20 போட்டியை வென்றது. 3 போட்டிகள் கொண்ட அத்தொடரை 2-0 என கைப்பற்றியது. ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது போட்டியில் செவ்வாய்க்கிழமை விளையாடும்.

பும்ரா உலகக் கோப்பையில் விளையாடமாட்டார் என்று கடந்த வாரம் செய்திகள் பரவியபோது பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி அதை மறுத்தார். ஆனால் திங்கள்கிழமை டி20 உலகக் கோப்பை அணியிலிருந்து பும்ரா முதுகுப் பகுதியில் ஏற்பட்டிருக்கும் காயத்தின் காரணமாக விலகியிருப்பதை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் உறுதி செய்தது. "இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் மருத்துவக் குழு, வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ராவை ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை அணியில் சேர்க்கவேண்டாம் என்று பரிந்துரைத்துள்ளது.

நிபுணர்களிடம் கலந்தாலோசித்து அவர்களின் பரிந்துரைக்கு ஏற்ப இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது" என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தான் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். இதே முதுகு பிரச்சனையின் காரணமாகத் தான் கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்கள் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் பும்ரா விளையாடவில்லை. அதன் பிறகு இந்திய அணிக்கு மீண்டும் கம்பேக் கொடுத்த அவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடந்த சர்வதேச டி20 தொடரின் இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகளில் பங்கேற்றார்.

banner

Related Stories

Related Stories