விளையாட்டு

டி20 உலகக் கோப்பையில் இருந்து பும்ரா விலகல்?.. காரணம் என்ன?: இந்தியாவுக்கு பின்னடைவா?

டி20 உலகக் கோப்பையில் இருந்து பும்ரா விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

டி20 உலகக் கோப்பையில் இருந்து பும்ரா விலகல்?.. காரணம் என்ன?: இந்தியாவுக்கு பின்னடைவா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் வெற்றி பெறும் நோக்கில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்ளிட்ட அணியின் வீரர்கள் தயாராகி வருகின்றனர்.

மேலும் இந்த டி20 உலகக் கோப்பை வெல்ல இந்திய அணிக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக முன்னாள் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் இந்திய அணி வீரர்களின் ஆட்டங்கள் தொடர்ந்து ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியே வருகிறது.

டி20 உலகக் கோப்பையில் இருந்து பும்ரா விலகல்?.. காரணம் என்ன?: இந்தியாவுக்கு பின்னடைவா?

அண்மையில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கான தொடரில் இந்திய அணி 2-1 என கைப்பற்றினாலும், முதல் போட்டியில் 200 ரன்களை அடித்தும் ஆஸ்திரேலியா அணி எளிதில் வெற்றி பெற்றது இந்திய அணியின் பந்து வீச்சைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

தற்போது இந்திய அணி தென்னாப்பிரிக்காவுடனான தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இருப்பினும் இந்த போட்டியில் பும்ரா விளையாடவில்லை.

டி20 உலகக் கோப்பையில் இருந்து பும்ரா விலகல்?.. காரணம் என்ன?: இந்தியாவுக்கு பின்னடைவா?

இந்நிலையில் பயிற்சியின் போது பும்ராவிற்கு முதுகில் காயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அவர் 6 மாதங்கள் வரை விளையாட முடியாது என்ற தகவலும் வெளியாக உள்ளது.

அடுத்த மாதம் உலகக் கோப்பை தொடர் தொடங்க உள்ள நிலையில் பும்ராவிற்கு காயம் ஏற்பட்டுள்ளதாகல் அவர் அணியில் இடம் பெறுவது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ச்சியாக இந்திய அணியின் பந்து வீச்சு விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் பும்ரா விலக உள்ளதாகத் தகவல் வெளியாகி வருவது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories