விளையாட்டு

”இவர்கள் ஆடினால் மட்டுமே உலககோப்பையை இந்திய அணி நினைத்து பார்க்க முடியும்” -பாக். முன்னாள் வீரர் கருத்து!

இந்தியாவின் டாப் 3 வீரர்கள் நன்றாக விலையாட வேண்டும் இல்லையெனில் அவர்கள் ஆசிய கோப்பையைப் போலவே உலகக் கோப்பையிலும் விரைவில் வெளியேற நேரிடும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் கூறியுள்ளார்.

”இவர்கள் ஆடினால் மட்டுமே உலககோப்பையை இந்திய அணி நினைத்து பார்க்க முடியும்” -பாக். முன்னாள் வீரர் கருத்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

2022 ஆண்கள் டி20 உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 16ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது. இந்தத் தொடரில் கலந்துகொள்ளும் இந்திய அணியை கடந்த திங்கள் கிழமை அறிவித்தது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். இந்த ஆசியக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டியைத் தவறவிட்ட இந்திய அணி தான் கிட்டத்தட்ட இந்தத் தொடருக்கும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. காயத்தினால் அந்தத் தொடரில் விளையாடிடாத ஜஸ்ப்ரித் பும்ரா, ஹர்ஷல் படேல் இருவரும் காயத்தில் இருந்து மீண்டிருப்பதால், மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்திருக்கிறார்கள். முகமது ஷமி இந்தத் தொடரில் பேக் அப் வீரராக இடம் பெற்றிருக்கிறார். ஆசிய கோப்பை தொடரின்போது காயமடைந்த ரவீந்திர ஜடேஜா உலகக் கோப்பைக்கான அணியில் இடம் பெறவில்லை.

இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் பற்றிய தன்னுடைய கருத்தைத் தெரிவித்திருக்கும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் டேனிஷ் கனேரியா, இந்திய அணியின் உலகக் கோப்பை வாய்ப்பு டாப் 3 பேட்ஸ்மேன்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்பதைப் பொறுத்துத்தான் அமையும் என்று கூறியிருக்கிறார். ஆசிய கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்டு மீண்டும் விராட் கோலி ஃபார்முக்கு திரும்பியிருக்கும் நிலையில், மற்ற 2 வீரர்களான ஓப்பனர்கள் ரோஹித் ஷர்மா, கேஎல் ராகுல் ஆகியோரின் செயல்பாட்டில் தனக்கு ஐயம் இருப்பதாகக் கூறியிருக்கிறார் கனேரியா.

”இவர்கள் ஆடினால் மட்டுமே உலககோப்பையை இந்திய அணி நினைத்து பார்க்க முடியும்” -பாக். முன்னாள் வீரர் கருத்து!

கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கும், அவருடைய சக ஓப்பனிங் பார்ட்னரான கேஎல் ராகுலுக்கும் ஒரு எச்சரிக்கை கொடுத்திருக்கிறார். அவர்கள் இருவரும் சிறப்பான செயல்பாட்டைக் கொடுக்காதபட்சத்தில் இந்திய அணி பெரிதாகத் தடுமாறும் என்று எச்சரித்திருக்கிறார் பாகிஸ்தான் அணியின் அந்த முன்னாள் ஸ்பின்னர்.

"விராட் கோலி ஃபார்முக்குத் திரும்பியிருக்கிறார். அதேசமயம் ரோஹித் ஷர்மா, கேஎல் ராகுல் போன்றவர்களும் பெரிய ஸ்கோர்கள் எடுக்கத் தொடங்கவேண்டும். இல்லையெனில் அவர்கள் ஆசிய கோப்பையைப் போலவே உலகக் கோப்பையிலும் விரைவில் வெளியேற நேரிடும்" என்று தன்னுடைய யூ டியூப் சேனல் வீடியோவில் கூறியிருக்கிறார் கனேரியா.

டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்டான ஹர்ஷல் படேல், ஜஸ்ப்ரித் பும்ராவோடு இணைந்து பெங்களூருவில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடெமியில் காயத்தில் இருந்து மீண்டு வந்திருக்கிறார். அவர்கள் இருவரும் ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியோடு இணைவார்கள். அதேசமயம் 2022 ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்ட உம்ரன் மாலிக் இந்திய அணியில் இடம் பெறத் தவறினார்.

”இவர்கள் ஆடினால் மட்டுமே உலககோப்பையை இந்திய அணி நினைத்து பார்க்க முடியும்” -பாக். முன்னாள் வீரர் கருத்து!

உம்ரன் மாலிக் அணியில் இடம்பெறாதது இந்திய அணியை பெரிய அளவில் பாதிக்கப்போவதில்லை. ஆனால் அந்த அதிவேக வேகப்பந்துவீச்சாளரை இந்திய அணி பேக் அப் வீரராகவாவது இணைத்திருக்கலாம் என்று கூறியிருக்கிறார் கனேரியா. ஆஸ்திரேலிய ஆடுகளங்களை கருத்தில் கொண்டு அந்த முடிவை இந்தியா எடுத்திருக்கலாம் என்று கூறியிருக்கிறார் அவர்.

"இந்திய அணி உம்ரன் மாலிக்கை பேக் அப் வீரர்களுள் ஒருவராக தேர்வு செய்திருக்கலாம். குறைந்தபட்சம் இந்திய அணி அதிவேகமான பந்துவீச்சாளர் ஒருவருக்கு எதிராக பயிற்சியாவது பெற்றிருக்கும்" என்று கூறியிருக்கிறார் அவர்.

ஆசிய கோப்பையின் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வியடைந்தது இந்திய அணி. அதனால், இறுதிப் போட்டிக்கு முன்னேறத் தவறியது. இந்திய அணியின் உலகக் கோப்பை பயணம் அக்டோபர் 24ம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் ரோஹித் தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தானை சந்திக்கிறது. கடந்த ஆண்டு துபாயில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணி இந்தியாவை தோற்கடிந்திருந்தது.

banner

Related Stories

Related Stories