விளையாட்டு

"இந்திய வீரர்களின் காயத்துக்கு காரணமே இதுதான், அதை பற்றி யாரும் பேசுவதில்லை"- விரேந்திர சேவாக் கருத்து !

இந்திய அணி வீரர்களின் காயங்கள் கிரிக்கெட் களத்தில் நிகழ்வதில்லை. அதைப் பற்றி யாரும் பேசுவதில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் கூறியுள்ளார்.

"இந்திய வீரர்களின் காயத்துக்கு காரணமே இதுதான், அதை பற்றி யாரும் பேசுவதில்லை"- விரேந்திர சேவாக் கருத்து !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

2022 ஆசிய கோப்பை தொடர் இந்திய அணி எதிர்பார்த்ததைப் போல அமையவில்லை. சூப்பர் 4 சுற்றில் இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வெளியேறியது ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி. கடைசிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியைப் பந்தாடி 101 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. மேலும் 3 ஆண்டுகளாக இந்திய ரசிகர்கள் ஏங்கிக்கொண்டிருந்த விராட் கோலியின் சர்வதேச சதமும் அந்தப் போட்டியில் வந்தது.

இப்படி சாதகமான முறையில் இந்தத் தொடர் முடிந்திருந்தாலும், இன்னொரு சிக்கலும் இந்தத் தொடரில் இந்திய அணிக்கு ஏற்பட்டது. சூப்பர் 4 சுற்று தொடங்குவதற்கு முன்பாக காயம் பட்டு தொடரிலிருந்து வெளியேறினார் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா. அதற்கு முன்பாக ஜஸ்ப்ரித் பும்ரா, ஹர்ஷல் படேல் இருவரும் காயம் காரணமாக இந்தத் தொடரில் பங்கேற்காமல் இருந்தனர்.

"இந்திய வீரர்களின் காயத்துக்கு காரணமே இதுதான், அதை பற்றி யாரும் பேசுவதில்லை"- விரேந்திர சேவாக் கருத்து !

கடந்த ஒரு ஆண்டாகவே காயத்தால் இந்திய அணி பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. நட்சத்திர பேட்ஸ்மேன் கேஎல் ராகுல், வேகப்பந்துவீச்சாளர் தீபக் சஹார் இருவரும் கிட்டத்தட்ட 6 மாதங்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளைத் தவற விட்டனர். இது பற்றிப் பேசிய இந்திய அணியின் முன்னாள் ஓப்பனிங் பேட்ஸ்மேன் விரேந்திர சேவாக், இந்திய வீரர்கள் காயம் அடைவதில் ஒரு ஒற்றுமை இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

இந்திய அணியின் பிரச்சனைகள் இப்போது காயம் தான். ஆனால் அவை கிரிக்கெட் களத்தில் நிகழ்வதில்லை. அதைப் பற்றி யாரும் பேசுவதில்லை" என்று சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் வருத்தம் தெரிவித்திருக்கிறார் சேவாக்.

"ஹர்திக் பாண்டியா வேண்டுமானாலும் பந்துவீசும் போது காயம் அடைந்தார். ஆனால் பெரும்பாலான வீரர்கள் ஜிம்மிலோ, களத்துக்கு வெளியேவோ தான் காயம் அடைகிறார்கள். ஜடேஜா களத்தில் காயம் அடைந்து நாம் யாரும் பார்க்கவில்லை. போட்டிக்குப் பிறகு, அவர் காயம் அடைந்திருப்பதாக நமக்குத் தெரியவந்தது. அப்படியெனில், இந்தக் காயங்களில் களங்களுக்கு வெளியேவோ அல்லது ஜிம்களிலேயோ நடக்கிறது என்று தானே அர்த்தம். இந்த விஷயங்கள் முதலில் சரிசெய்யப்படவேண்டும்

"இந்திய வீரர்களின் காயத்துக்கு காரணமே இதுதான், அதை பற்றி யாரும் பேசுவதில்லை"- விரேந்திர சேவாக் கருத்து !

திறமை தான் மிகவும் முக்கியம். இந்திய அணிக்கு தேர்வாகி நீங்கள் ஒரு தொடரில் விளையாடும்போது ஜிம் முக்கியமல்ல. திறமை தான் அதைவிட அவசியம். இரண்டு மாதங்களுக்கு நீங்கள் கிரிக்கெட் விளையாடாமல் இருந்து திரும்பியிருந்தால் உங்களுக்கு ஃபிட்னஸ் அவசியம். ஆனால் இப்போது அப்படி இல்லையே" என்று கேட்டிருக்கிறார் சேவாக்.

இந்தியாவின் அதிரடி பேட்ஸ்மேனாகத் திகழ்ந்த சேவாக், சச்சின் டெண்டுல்கர் எப்படி ஒரு போட்டிக்குத் தயாராவார் என்று பகிர்ந்திருக்கிறார். "நான் சச்சின் டெண்டுல்கரிடம் ஒரு முக்கியமான விஷயத்தை கற்றிருக்கிறேன். அவர் எப்போதெல்லாம் அணியோடு இணைகிறாரோம் அந்தக் காலகட்டத்தில் அவர் 6-8 கிலோ எடைக்கு மேல் தூக்கி நான் பார்த்தது இல்லை. அதுபற்றி ஒருமுறை அவரிடம் கேட்டேன். 'இவ்வளவு குறைவான எடையை தூக்குவதில் என்ன பயன்' என்று கேட்டேன். அதற்கு அவர், 'இப்படித் தான் நான் என்னை பாதுகாத்துக்கொள்கிறேன். நான் ஒரு போட்டியில் விளையாடப்போகிறேன். என்னுடைய ரிதத்தை சரியாக வைத்துக்கொள்ள இதைச் செய்கிறேன். நான் என் பலத்தை இழந்துவிடக்கூடாதல்லவா' என்று கூறினார். இன்றைய காலகட்டத்தில் வீரர்கள் தயார் ஆகும் முறையைப் பாருங்கள். ஒரு தொடருக்கு நடுவே 50 முதல் 70 கிலோ வரையிலான எடைகளைத் தூக்கு வீடியோ வெளியிடுகிறார். இதுபோன்ற விஷயங்கள் காயம் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகளை ஏற்படுத்துகின்றன" என்றும் கூறினார் சேவாக்.

banner

Related Stories

Related Stories