விளையாட்டு

டி20 உலகக் கோப்பை இந்திய அணி அறிவிப்பு.. அணியின் முழு விவரம் என்ன ?

டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடப்போகும் இந்திய அணியை BCCI அறிவித்துள்ளது.

டி20 உலகக் கோப்பை இந்திய அணி அறிவிப்பு.. அணியின் முழு விவரம் என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடப்போகும் இந்திய அணியை திங்கள் கிழமை அறிவித்திருக்கிறது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். அதுமட்டுமல்லாமல் இந்தியாவில் வந்து டி20 தொடர்களில் விளையாட இருக்கும் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான இந்திய அணியையும் அறிவித்திருக்கிறது பிசிசிஐ. ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்திடாத முகமது ஷமி, உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம் பிடிக்கவில்லை. அவர் ரிசர்வ் வீரராக மட்டுமே அறிவிக்கப்பட்டிருக்கிறார். இருந்தாலும் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான தொடர்களில் இடம்பெற்றிருக்கிறார் ஷமி.

காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் விளையாடாமல் இருந்த வேகப்பந்துவீச்சாளர்கள் ஜஸ்ப்ரித் பும்ரா, ஹர்ஷல் படேல் இருவரும் மீண்டும் அணிக்குத் திரும்பியிருக்கிறார்கள். ஆசிய கோப்பையில் விளையாடாத அவர்கள், பெங்களூருவில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடெமியில் பயிற்சி பெற்று காயத்திலிருந்து மீண்டிருக்கிறார்கள்.

டி20 உலகக் கோப்பை இந்திய அணி அறிவிப்பு.. அணியின் முழு விவரம் என்ன ?

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி 3 சர்வதேச டி20 போட்டிகள் கொண்ட தொடரில் மோதுகிறது. அந்தத் தொடர் செப்டம்பர் 20ம் தேதி தொடங்குகிறது. தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக 2 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடும் இந்திய அணி, 3 ஒருநாள் போட்டிகளிலும் மோதுகிறது. இந்தத் தொடர் செப்டம்பர் 28ம் தேதி தொடங்கி அக்டோபர் 11 முடிவுக்கு வருகிறது. தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, வேகப்பந்துவீச்சாளர்கள் ஆர்ஷ்தீப் சிங், புவனேஷ்வர் குமார் மூவரும் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடெமிக்குச் சென்று காயத்திலிருந்து மீள்வதற்கான பயிற்சிகளில் ஈடுபடுவார்கள் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருக்கிறது. இவர்கள் மூவரும் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருக்கிறார்கள்.

உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி: ரோஹித் ஷர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணைக் கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சஹால், அக்‌ஷர் படேல், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், ஜஸ்ப்ரித் பும்ரா, ஆர்ஷ்தீப் சிங்

ரிசர்வ் வீரர்கள்: முகமது ஷமி, தீபக் சஹார், ஷ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னோய்

ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி: ரோஹித் ஷர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணைக் கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சஹால், அக்‌ஷர் படேல், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி, தீபக் சஹார்

தென்னாப்பிரிக்க தொடருக்கான இந்திய அணி: ரோஹித் ஷர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணைக் கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சஹால், அக்‌ஷர் படேல், முகமது ஷமி, ஹர்ஷல் படேல், ஜஸ்ப்ரித் பும்ரா, ஆர்ஷ்தீப் சிங்

banner

Related Stories

Related Stories