விளையாட்டு

பணம் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்வீர்களா ? BCCI-யின் செயல்பாடு குறித்து விமர்சித்த முன்னாள் வீரர்!

இந்தியாவுக்கு ஏன் துபாயில் மட்டும் போட்டி நடக்கிறது என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சிகந்தர் பாக்ட் கேள்வி எழுப்பியுள்ளார்.

பணம் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்வீர்களா ? BCCI-யின் செயல்பாடு குறித்து விமர்சித்த முன்னாள் வீரர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

துபாயில் நடைபெற்ற ஆசியக்கோப்பை தொடரின் இரண்டாவது போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வுசெய்தது. உலக கிரிக்கெட்டில் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 147 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

பின்னர் ஆடிய இந்திய அணியில் கே.எல்.ராகுல் முதல் பந்திலேயே அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். எனினும் தொடர்ந்து ஜோடி சேர்ந்த விராட் கோலி - ரோகித் சர்மா நிதானமாக விளையாடி முதல் விக்கெட்டிற்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதனால் இந்திய ரசிகர்களுக்கு நம்பிக்கை அதிகரித்தது.

ஆனால் சிறிய தவறால் ரோகித், விராட் கோலி இருவருமே அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். அதன்பின்னர் இறுதியில் ஜடேஜா,பாண்டியா அதிரடி ஆட்டம் காரணமாக 2 பந்துகள் எஞ்சிய நிலையில் இந்திய அணி திரில் வெற்றிபெற்றது.

பணம் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்வீர்களா ? BCCI-யின் செயல்பாடு குறித்து விமர்சித்த முன்னாள் வீரர்!

பின்னர் ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் துவக்க வீரர் கே.எல்.ராகுல் டி20-யில் டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடினார்.அந்த போட்டியில் சூரியகுமார் யாதவின் ஆட்டத்தால் இந்திய அணி பெரிய இலக்கை எட்டி ஹாங்காங் அணியை வீழ்த்தியது.

இந்த தொடரில் பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணியுடனான 2 போட்டிகளையும் துபாய் மைதானத்தில்தான் இந்தியா விளையாடியது. இதே போல சூப்பர் 4 சுற்றில் இந்தியா விளையாடும் போட்டிகளும் துபாய் சர்வதேச மைதானத்தில்தான் நடைபெறவுள்ளது. ஆனால் மற்ற அனைத்து அணிகளும் சார்ஜா, துபாய் என இரண்டு மைதானங்களில் விளையாடுகின்றன.

பணம் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்வீர்களா ? BCCI-யின் செயல்பாடு குறித்து விமர்சித்த முன்னாள் வீரர்!

இந்தநிலையில் இந்தியாவுக்கு ஏன் துபாயில் மட்டும் போட்டி நடக்கிறது என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சிகந்தர் பாக்ட் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "இந்திய அணி ஏன் துபாயில் மட்டும் விளையாடுகிறது? சார்ஜா மைதானத்தில் விளையாடுவதற்கு பயப்பட என்ன காரணம்? இந்தியா - பாகிஸ்தான் போட்டி முதலில் சார்ஜாவில் தான் நடைபெறவிருந்தது. ஆனால் பின்னர் மாற்றப்பட்டது. இதன் காரணத்தை வெளிப்படுத்த வேண்டும்" என்று கூறியுள்ளார்

இது குறித்து இணையத்தில் கருத்து பதிவிட்டுள்ள பாகிஸ்தான் ரசிகர்கள் சிலர், "இந்திய அணிக்கு சார்ஜாவில் மோசமான ரெக்கார்ட்கள் உள்ளன. எனவே அங்கு விளையாடுவதற்கு பயந்து தான் மாற்றங்களை செய்துள்ளது. ஐசிசி மற்றும் ஆசிய கவுன்சிலுக்கு பெரும் பணம் இந்தியாவில் இருந்துதான் வருகிறது. இதனால் அவர்கள் சொல்வதைதான் கேட்கிறார்கள்" என்று கூறியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories